வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் கிழக்கு மாகாணத்தில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது.


கி.மா.சு சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன். 

(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் ,ஏ.எல்.எம்.சலீம் )
வெளிநாட்டு சுற்றுலாப் பயனிகளின் வருகையினால் கிழக்கு மாகாணத்தில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது இதைக்கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாகவே உள்ளது இருந்த போதிலும் இதைக்கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்  என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தெரிவித்தார். 
டிசம்பர் 1ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி இலங்கை தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு  இன்று சனிக்கிழமை (28-11-2015)காலை 9.30மணி தொடக்கம் பகல் 1.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவிலும்,அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உல்லையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இதன் காரணமாகவே பாலியல் தொடர்பான நோய்கள்  அதிகரித்து வருகின்றது. 
எனவே இந்த விடையத்தில் நாங்கள் பொது மக்களுக்கு விழிப்பூட்டும்  வகையில் கருத்தரங்குகள்,ஆலோசனைகள் மற்றும் சுலோகங்கள் மூலமாகவும்  அறிவுறுத்தி வருகின்றோம் ஆகவே இந்த விடையங்களை கவனத்தில் எடுத்து  பொதுமக்கள் மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டும்
இந்த பாலியல் தொடர்பான நோய்கள் மூலம் ஏற்டுகின்ற பாதிப்புக்களையும்,இவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் உடகவியலாளர்கள்  ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும் என்றார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சமுக மருத்துவ ஆலோசகர்  டாக்டர் சத்தியா ஹேரத் விஷேட வளவாளராக் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.இங்கு திருகோணமலை, மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் , வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் ,டாக்டர்கள், மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் அடங்கலாக  முஸ்லிம்,தமிழ்.சிங்கள ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் அவர்களின் நெறியாள்கையுடன் இந்த ஊடகவியலாளர்  செயலமர்வு இடம் பெற்றது 


















Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது