கிழக்கில் Knowledge Force கல்வி, தொழில் வழிகாட்டலும் புத்தகக் கண்காட்சியும்

கிழக்குமாகாணத்தில் முதல் முறையாக Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன் Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று  (27) சாய்ந்தமருது லீமெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்  பிரதம அதிதியாக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
கௌரவ அதிதியாக சிரேஷ்ட கட்டிடக்கலை நிபுணர் எம்.ஐ.எம்.இஸ்மாயில்  விசேட அதிதியாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

Knowledge Force நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் கண்காணிப்பிலும் வழிநடத்தலிலும் ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கையில் புகழ்பெற்ற புத்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொழில் வழிகாட்டி அமைப்புக்கள் வங்கிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தங்களது காட்சிக் கூடங்களையும் வழிகாட்டல் அலுவலகங்களையும் அமைத்துள்ளன.

The biggest education, Job & Book Fair in the Eastern Province of Srilanka எனும் தலைப்பில் எதிர்வரும் 2015-11-29 வரை இடம்பெறவுள்ள இப்பிரமாண்டக் கண்காட்சியானது மாணவர்களுக்கும், உயர்கல்வியை தொடரவுள்ளவர்களுக்கும், தொழில் வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், சிறந்த புத்தகங்களுடன் உறவாடவுள்ளவர்களுக்கும், கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கும்வரப்பிரசாதமாகும்.



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது