முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவன(MESRO) சாதனையாளர் கௌரவிப்பு
முஸ்லிம் கல்வி சமூக ஆய்வுகள் நிறுவனம் (மெஸ்ரோ) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து நடாத்தும் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை வலயத்தில் சித்தியடைந்த சுமார் 214 மாணவர்கள் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட இருப்பதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்கள் விசேடமாக கெளரவிக்கப்பட இருக்கின்றனர்
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம.எம்..ஹரிஸ் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
Comments
Post a Comment