Posts

Showing posts from April, 2015

உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருது எங்கும் சுவரொட்டிகள் !

Image
சாய்ந்தமருதுக்கான   தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றிரவு சாய்ந்தமருதெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுக் காணப்படுகிறது. சாய்ந்தமருது பொது அமைப்புக்களின் சம்மேளனம் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளில், சன்மானம்...! பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தனியான உள்ளூராட்சி மன்றம் பெற்றுத்தருவோருக்கு 18,000 வாக்குகள் ஒட்டுமொத்த சன்மானம்..! தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன...? தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே... ஒன்றுபடுவோம்...! உள்ளூராட்சி சபையை வென்றெடுப்போம்..!  அரசே ..! தனியான உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு! இனியும் பொறுமைகாக்க தயாரில்லை!  பகிஷ்கரிப்போம்..! தனியான உள்ளூராட்சிசபை பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இல்லையேல் தேர்தலைப் பகிஷ்கரிப்போம்! போன்ற வாசகங்கள் அச்சுவரொட்டிகளில் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. பொதுமக்கள் அதிகமாக சஞ்சரிக்கும், பள்ளிவாசல்கள், பொதுச்சந்தை, வைத்தியசாலை, பாடசாலைகள், நூலகம், பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு அருகில் இவை ஒட்டுப்பட்டுகாணப்படுவது குறிப்பிடத்த...

தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகமாநாடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் தொழுநோயைகட்டுப்படுத்துவதுதொடர்பாகஊடகவியலாளர்களுக்குவிளக்கம ளிக்கும் ஊடகமாநாடு இன்று (30-04-2015) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் தாய் சேய் நலவைத்தியஅதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால்,பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன்,பிராந்திய நோய் தடுப்புவைத்திய அதிகாரி டாக்டர் சி.என்.செனரத் ஆகியோர் தொழு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தனர் . பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் அங்கு உரையாற்றுகையில் வசதிகள் பல இருந்தும் தோல் நோய் நிபுணர் ஒருவர் கல்முனை பிராந்தியத்தில் இல்லாதிருப்பது பெருங்குறையாக உள்ளது . அக்குறை நீக்கப் பட்டால் எமது இந்த நோய் தொடர்பான வேலை திட்டங்கள் மேலும் அதிகரிக்கப் படும்  .

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான 20.000ஆயிரம் ரூபா பெறுமதியான போஷாக்கான உணவுப் பொதிகள் வழங்கும் பிரதான நிகழ்வு நேற்று  நடை பெற்றது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமி்டல் பணிப்பாளர்  ரீ.மோகனகுமார் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன் தாய் சேய் வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.ஏ.சி.எம்.பஸால் பிரதேச செயலக திட்டமி்டல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் எம்.என்.எம்.பைலான் உட்படபொது சுகாதாரப்பரிசோதகர்கள்   கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்திர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட பிரதி முகாமையாளர் பிரியந்த குமாரவுக்கு கல்முனை இலங்கை வங்கி கிளையில் பிரியாவிடை வைபவம்

Image
யு.எம்.இஸ்ஹாக்  அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக இலங்கை வங்கியின் பிரதி முகாமையாளராக கடமையாற்றி இடமாற்றலாகி  செல்லும் ஜே.ஜி. பிரியந்த குமாரவுக்கு  கல்முனை இலங்கை வங்கி  கிளையில்  நேற்று இரவு பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது. கல்முனை வங்கி கிளையின் முகாமையாளர் எம்.எல்.ஏ.ஸாக்கீர் தலைமையில்  நடை பெற்ற  வைபவத்தில்  இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண  பிராந்திய உதவி முகாமையாளர் ஆனந்த நடேசன்  பிரதம அதிதியாகவும்  கௌரவ அதிதிகளாக  கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர்  ஸ்ரீ பண்டா , அம்பாறை மாவட்ட புதிய பிரதி முகாமையாளர்  அத்தன கொல்ல  ஆகியோரும் கலந்து கொண்டனர் . அம்பாறை ,சம்மாந்துறை ,பொத்துவில்,ஹிங்குரான ,அக்கரைப்பற்று நிந்தவூர் இலங்கை வங்கி  கிளையின் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இடமாற்றலாகி  செல்லும் ஜே.ஜி. பிரியந்த குமாரவுக்கு  கல்முனை வங்கி முகாமையாளர் எம்.எல்.ஏ.ஸாக்கீர்  வாழ்த்துப்பா வாசித்து வழங்கி வைத்ததுடன் , பொன்னாடை மற்றும் நினைவு சின்னம் ,பொற்கிழி என்ப...

பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ சங்காபிஷேகப் பெரு விழா இன்று

Image
கல்முனை பாண்டிருப்பு அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய  வருடாந்த  மகோற்சவ  சங்காபிஷேகப்  பெரு  விழா இன்று புதன் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது. ஆலய பிரதம குரு   குரு  திலகம்  ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ  வ.கு.சிவானந்தம்  தலைமையில் இன்று அதிகாலை  முதல் இடம் பெற்றது இன்றைய சங்காபிஷேக வழிபாடுகள் யாவும் திரு ஆர்.விஜயகுமார் குடும்பத்தினரின் அனுசரணையுடன் இடம் பெற்றது. பத்து  நாட்களாக நடை பெறும்  கிரியைகளை தொடர்ந்து பத்தாம் நாளான 04.05.2015 ஞாயிற்றுக்  கிழமை  தீர்தோற்சவ துடன் மகோற்சவ  பெரு  விழா நிறைவு  பெறும் .   

காரைதீவில் அமர்க்களம் மதுக்கடை வேண்டாம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காரைதீவு பிரதான வீதியில் இயங்கிவரும் மதுபானசாலையை அகற்றுமாறும், அத்துடன் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறு கோரியும் இன்று புதன்கிழமை மாபெரும் சாத்வீகப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.  காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த சாத்வீகப் போராட்டத்தை நடத்தின. காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர்.  காரைதீவைச் சேர்ந்த 117 சமய, சமூக நிறுவனங்களின் சார்புடனும், பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற இந்த சாத்வீகப் போராட்டத்தில் காரைதீவைச் சேர்ந்த கல்விமான்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்திருந்தனர்.

அரசியல் சுயநலம் எனும் பலவீனத்தில் குளிர்காய காத்திருக்கின்றவர்கள் பிரதேசரீதியான சுயாதீனம் மற்றும் அபிவிருத்தி எனும் பெயரில் பொதுமக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்

Image
Dr.Y.L.Yoosuf இன்று எமது சமூகம் ஏனைய இரு சமூகங்களுக்கிடையிலும் நெருக்குதலுக்குள்ளாக்கப் படும் நிலையில் காணப்படுகிறது. முஸ்லிம்களின் பாரம்பரிய கல்முனை எனும் பெயரை சூறையாடுவதில் ஒரு சமூகமும் முஸ்லிம்களின் பாரம்பரிய ஜெய்லானி பள்ளிவாசலை தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரில் அகற்றுவதில் மற்றைய சமூகமும் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.என டாக்டர் வை.எல்.யூசுப்  ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  எமது அரசியல் தலைமத்துவங்கள் இதனை கண்டும் காணாதது போலவே இருப்பது கவலையளிக்கின்றது. அது மட்டுமல்ல இழக்காத காணிகளையும் இழந்தவையாக காட்டிக்கொண்டு அவைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களின் முயற்சிகளுக்கு மத்தியில் இழந்த காணிகளையாவது பெற்றுக்கொடுக்க இயலாத எமது தலைவர்களை என்னவென்று கூறுவது?  இவையாவும் எமது சமூகத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனையே காட்டுகிறது. இவ் ஆபத்திற்கு பகுதிக் காரணம் எமது தலைவர்களின் சுயநலம் தோய்ந்த க...

மருதமுனை மண்ணுக்கு மகுடம் சேர்த்த ஊடவியலாளர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு

Image
மருதமுனை சமூகமேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.ஆர்.ஏ.சத்தார் தொகுத்துள்ள“மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்புவிழாவும் கடந்த சனிக் கிழமை மாலை  மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது .திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகரஅபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டார். இதில் ஊடகவியலாளர்களானபி.எம்.எம்.ஏ.காதர் ,எம்.எல்.எம்.ஜமால்தீன், பஸிர் அப்துல் கையூம், ஜெஸ்மி எம் மூஸா ஆகியோருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் வாழ்நாள் சாதனையாளர்களாக பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கிகௌரவித்தார்.

19 :மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

Image
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு  அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டுள்ளன . பெரும்பான்மை வாக்குகளினால்   வாக்குகளால் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது 19ஆவது இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது . இதேவளை    சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார் . காலி பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் குமார வாக்களிக்கவில்லை. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருந்துக் கலவையாளர்களுக்கான பயிற்சி நெறி!

Image
மருந்துக் கலவையாளர்களுக்கான மருந்தாளர் பயிற்சி நெறிக்கு மட்டக்களப்பு, குருநாகல், ஹட்டன், மன்னார், அம்பாறை, திருகோணமலை  ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 35 மாணவர்களுக்கான பயிற்சி நெறி நேற்று  திங்கட்கிழமை (27) மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். முருகானந்தம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,  மருந்துக் கலவையாளர்கள் வைத்தியக் கலாநிதிகளுக்கு அடுத்ததாக ஒப்பிடப்படுகின்றனர் காரணம் வைத்தியர்கள் எழுதும் மருந்துகளை சரியாக நோயாளிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் நோய்களை சுகமாக்குவதில் முக்கிய பங்கெடுக்கின்றனர் அத்தோடு நோயாளர்களிடம் செல்வாக்கு உள்ள உத்தியோகத்தர்களாகக் காணப்படுகின்றனர். தேசிய போட்டிப் பரீட்சையில் முதல் 10 இடங்களில் வருபவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர். இலங்கையில் முதன் முதல் 1996 ஆம் ஆண்டு இப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.  கடந்த 2000 ஆம் ஆண்டு  முதலாவது பயிற்சி நெறி நடாத்தி ...

கல்முனை சந்தை தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப் பட வேண்டும்

Image
(அப்துல் அஸீஸ்​ ) கல்முனை சந்தை  கட்டிடத் தொகுதியில் நேற்று  ஏற்பட்ட   தீ  விபத்தில்  எரிந்த  கடைகளுக்கும், சேதமடைந்த  பொருட்களுக்கும்    நஷ்ட ஈட்டு  கொடுப்பனவுகள்  உடனடியாக  பெற்றுக்கொடுக்க பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.  மேலும்  பொலிசார்   இத்  தீ   விபத் துக்கான காரணத்தையும்   விசாரித்து  வெளிப்படுத்த வேண்டும் என   கல்முனை பொது  சந்தை வர்த்தக அமைப்பின் செயலாளர்  எ.எல்.எம்.கபீர் இன்று(28)தெரிவித்தார்.  இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும்  தெ ரிவிகையில், கல்முனை சந்தை கட்டிடத் தொகுதியில் நேற்று  ஏற்பட்ட    தீ  விபத்தில்   12 கடைகள்  முற்றாக எரிந்து  நாசமாகியுள்ளது.   வியாபார நிலையமாகவும்,  களஞ்சிய சாலையாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த   12 கடைகளில்  இருந்த  அனைத்து   உடமைகளும்   முற்றாக எரிந்துள்ளது . இன்று  கல்முனை சந்தை...

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களின் சித்திரை உலா

Image