மருதமுனை மண்ணுக்கு மகுடம் சேர்த்த ஊடவியலாளர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு
மருதமுனை சமூகமேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.ஆர்.ஏ.சத்தார் தொகுத்துள்ள“மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்” நூல் வெளியீடும் மருதமுனை மண்ணுக்கு மணம் சேர்த்தோர் கௌரவிப்புவிழாவும் கடந்த சனிக் கிழமை மாலை மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது .திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நகரஅபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டார். இதில் ஊடகவியலாளர்களானபி.எம்.எம்.ஏ.காதர் ,எம்.எல்.எம்.ஜமால்தீன், பஸிர் அப்துல் கையூம், ஜெஸ்மி எம் மூஸா ஆகியோருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் வாழ்நாள் சாதனையாளர்களாக பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கிகௌரவித்தார்.
Comments
Post a Comment