மருந்துக் கலவையாளர்களுக்கான பயிற்சி நெறி!

மருந்துக் கலவையாளர்களுக்கான மருந்தாளர் பயிற்சி நெறிக்கு மட்டக்களப்பு, குருநாகல், ஹட்டன், மன்னார், அம்பாறை, திருகோணமலை  ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 35 மாணவர்களுக்கான பயிற்சி நெறி நேற்று  திங்கட்கிழமை (27) மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமானது.
இந்த ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். முருகானந்தம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,  மருந்துக் கலவையாளர்கள் வைத்தியக் கலாநிதிகளுக்கு அடுத்ததாக ஒப்பிடப்படுகின்றனர் காரணம் வைத்தியர்கள் எழுதும் மருந்துகளை சரியாக நோயாளிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் நோய்களை சுகமாக்குவதில் முக்கிய பங்கெடுக்கின்றனர் அத்தோடு நோயாளர்களிடம் செல்வாக்கு உள்ள உத்தியோகத்தர்களாகக் காணப்படுகின்றனர்.

தேசிய போட்டிப் பரீட்சையில் முதல் 10 இடங்களில் வருபவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர். இலங்கையில் முதன் முதல் 1996 ஆம் ஆண்டு இப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.  கடந்த 2000 ஆம் ஆண்டு  முதலாவது பயிற்சி நெறி நடாத்தி முடிக்கப்பட்டது 15 வருடங்களின் பின்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் கொண்ட இப்பயிற்சி பாடநெறியில்; 9 மாதங்கள் பயிற்சியும் 3 மாதங்கள் செய்முறைப் பயிற்சியும் நடைமுறைப்படுத்தப்படும். பயிற்சிக்கு 80 வீதமான வரவு பெற்றவர்கள் மாத்திரமே இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவர். கிழக்கு மாகாணத்தில் 500 பேர் போட்டிப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்களுள் 35 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில்  54 வெற்றிடங்கள் உள்ளன. இந்த பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு உடனடியாக  வேலைவாய்ப்பு பெறும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், கிழக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம், மாகாண பிரதான மருந்தாளர் எஸ். வில்வராஜன், பிரதான பயிற்றுவிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆர். சிறிநாத், கிழக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதம கணக்காளர் எம். ரபீக், பயிற்சியாளர் பி. தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்