உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருது எங்கும் சுவரொட்டிகள் !

சாய்ந்தமருதுக்கான  தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றிரவு சாய்ந்தமருதெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுக் காணப்படுகிறது.

சாய்ந்தமருது பொது அமைப்புக்களின் சம்மேளனம் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளில்,


சன்மானம்...!
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தனியான உள்ளூராட்சி மன்றம் பெற்றுத்தருவோருக்கு 18,000 வாக்குகள் ஒட்டுமொத்த சன்மானம்..!

தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன...?
தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே...
ஒன்றுபடுவோம்...!
உள்ளூராட்சி சபையை வென்றெடுப்போம்..! 

அரசே ..! தனியான உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு! இனியும் பொறுமைகாக்க தயாரில்லை! 

பகிஷ்கரிப்போம்..!
தனியான உள்ளூராட்சிசபை பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இல்லையேல் தேர்தலைப் பகிஷ்கரிப்போம்!

போன்ற வாசகங்கள் அச்சுவரொட்டிகளில் உள்ளடங்கிக் காணப்படுகின்றன.

பொதுமக்கள் அதிகமாக சஞ்சரிக்கும், பள்ளிவாசல்கள், பொதுச்சந்தை, வைத்தியசாலை, பாடசாலைகள், நூலகம், பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு அருகில் இவை ஒட்டுப்பட்டுகாணப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்