கல்முனை சந்தை தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப் பட வேண்டும்
(அப்துல் அஸீஸ் )
கல்முனை சந்தை கட்டிடத் தொகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த கடைகளுக்கும், சேதமடைந்த பொருட்களுக்கும் நஷ்ட ஈட்டு கொடுப்பனவுகள் உடனடியாக பெற்றுக்கொடுக்க பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் பொலிசார் இத் தீ விபத் துக்கான காரணத்தையும் விசாரித்து வெளிப்படுத்த வேண்டும் என கல்முனை பொது சந்தை வர்த்தக அமைப்பின் செயலாளர் எ.எல்.எம்.கபீர் இன்று(28)தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிகையில்,
கல்முனை சந்தை கட்டிடத் தொகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 12 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வியாபார நிலையமாகவும், களஞ்சிய சாலையாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த 12 கடைகளில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்துள்ளது .
இன்று கல்முனை சந்தையின் இப் பகுதியானது மயானமாக காட்சியளிக்கின்றது. மேலும் இந்நிகழ்வானது எங்களது வர்தகர்களினதும், நுகர்வோரினதும் மனதை மிகவும் பாதித்துள்ளது. எனவே எங்களது சந்தையை மீளமைத்து எங்களது வியாபார நடவடிக்கைகளை தொடர்வதற்க்கு இதற்கு பொறு ப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக முன்வரவேண்டும் என வேண்டிக் கொன்டார்.
இதே வேளை இத் தீ விபத்து தொடர்பாக 12 கடைகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடு படும் எங்களது வியாபாரிகள் கல்முனை பொ லிஸ் நிலையத்தில் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment