பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ சங்காபிஷேகப் பெரு விழா இன்று
கல்முனை பாண்டிருப்பு அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ சங்காபிஷேகப் பெரு விழா இன்று புதன் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு குரு திலகம் ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ வ.கு.சிவானந்தம் தலைமையில் இன்று அதிகாலை முதல் இடம் பெற்றது இன்றைய சங்காபிஷேக வழிபாடுகள் யாவும் திரு ஆர்.விஜயகுமார் குடும்பத்தினரின் அனுசரணையுடன் இடம் பெற்றது.
பத்து நாட்களாக நடை பெறும் கிரியைகளை தொடர்ந்து பத்தாம் நாளான 04.05.2015 ஞாயிற்றுக் கிழமை தீர்தோற்சவ துடன் மகோற்சவ பெரு விழா நிறைவு பெறும் .
Comments
Post a Comment