Posts

Showing posts from December, 2014

மு.கா. தலைவர் இன்னும் மூக்காத (பருவம்) தலைவராகவே இருக்கிறார்.

Image
ஷேகு இஸ்ஸதீன்! மனசாட்சியின் விருப்பில் வாக்களிக்க சொன்ன மு.கா. மைத்திரிக்கு மாறியது ஏன்? மஹிந்த முஸ்லிம்களுக்கு ஒரு மருந்து போல” என்கிறார் ஷேகு இஸ்ஸதீன்! தொடங்கிய போது இருந்த நிலைமை இப் போது இல்லை. நிலைமைகள் மாறிக்கொண்டு வருகின்றன. எதிரணி வேட்பாளர் அமோகமாக வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. எப்படியாவது மஹிந்தவே வெல்லுவார் என்ற எண்ணம் இப்போது வேறு வடிவெடுக்கத் தொடங்கியிருக்கிறது. நீதியான ஒரு தேர்தலிலும் வாக்குகளின் எண்ணிக்கையில் மஹிந்த வெல்வது உறுதியாகிக் கொண்டு வருகிறது. உறுதியான ஒரு தலைமைத்துவத்தின் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மைத்திரியின் கிளைக்கு முஸ்லிம் கட்சிகளின் தாவலும் தமிழர் கூட்டமைப்பினர் மைத்திரியை ஆதரிப்பதற்கான தீர்மானமும் எதிர்பார்த்தபடி நடுநிலையாக இருந்த பொதுச் சிங்களப் பெரும்பான்மையினரை தட்டி எழுப்பியுள்ளன. சிறுபான்மையினர்களின் மைத்திரிக்கான ஆதரவு இன உணர்வுகளைப் பொருட்படுத்தாதிருந்த கணிசமான சிங்களவர்களை மஹிந்தவுக்கு சாதகமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மஹிந்தவின் வெற்றி உத்தியோகப்பற்றற்ற மு...

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்று (29) திறந்து வைக்கப்பட்டன.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6   வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்று (29) திறந்து வைக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரசேத்தில் காணப்படுகின்ற அதிகமான வீதிகள் குறித்த திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாழ் மக்கள் குன்றும் குழியுமான வீதிகளினால் எதிர்கொண்ட பல்வேறுபட்ட அசௌகரிகங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.    தேசிய தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு வீதி, கல்யாண வீதி, அல்-ஹிலால் வீதி, ஜி.எம்.எம்.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, மற்றும் ஒஸ்மன் வீதி ஆகியவற்றை மக்கள் பாவனைக்கா திறந்து வைத்தார். இதன்போது அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான ...

கல்முனை வலயக் கல்வி அலுவகத்தின் நிரந்தர புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம்

Image
29 வருடங்களுக்கு முன்னர்  குண்டு வைத்து தகர்க்கப் பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவகத்தின் நிரந்தர புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் உட்பட முப்பெரும் விழா  கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) நடை பெற்றது. 1985 ஆம் ஆண்டு கல்விக் காரியாலயமாக இயங்கிய இந்தக் கட்டிடம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதையடுத்து  இன்று வரை இவ்வலுவலகம் தற்காலிகமாக வாடகைக் கட்டிடங்களிலேயே இயங்கி வருகிறது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முயற்சியினால்  அரசாங்கத்தின் முழுப் பங்களிப்போடு உலக வங்கியின் நிதியுதவியில் கல்முனை வலயக் கல்வி அலுவலக புதிய இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம்    கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். முதற்கட்டமாக கட்டிட நிர்மாணப் பணிக்கு இதற்கென 60 இலட்சம் ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சமயப் பெரிய...

பொத்துவில் வெள்ள அகதிகளுக்கு உலருணவு வழங்கினார் ஏழைகளின் தோழன் இராஜேஸ்வரன்

Image
பொத்துவில் சிங்கள மகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள குண்டுமடு வட்டிவெளி பிரதேச 50 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கு உலருணவு நிவாரணத்தை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நேற்று வழங்கினார். அவருடன் அவரது செயலாளர் வி.அழகரெத்தினம் (முன்னாள் பிரதேச செயலாளர்) சிவநெறிக் கழகத்தின் சிவதொண்டன் அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டார். அதன் போது எடுத்த படங்கள் இவை.

தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு விசேட சந்தர்ப்பம்

Image
தவிர்க்க முடியாத காரணங்களால் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று (30) வாக்களிப்பதற்கான விசேட சந்தர்ப்பமொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய கடந்த 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்கள் இன்று தமது அலுவலகம் அமைந்துள்ள நிருவாக மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்களிக்க முடியும். மாவட்டத் தேர்தல்கள் அலுவல கத்தில் முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 வரை அஞ்சல் வாக்குகள் அடையாள மிடலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ?

Image
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாவில்ஆற்றின் நீர்மட்டம் 14அடிவரை உயர்ந்துள்ளது. எனவே மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதுவரை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான 64 குளங்களில் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது பிரதேசம் நகர சபை அந்தஸ்துடன் அலங்கரிக்கப் போகிறது

Image
சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அவாவாக இருக்கின்ற உள்ளுராட்சி சபைக் கோரிக்கை மிக விரைவில் நகர சபை என்ற அந்தஸ்த்துடன் சாய்ந்தமருதுக்கு மகுடம் சூட்டப்படும் என உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளா் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று இரவு சாய்ந்தமருது பிரதான வீதியில் தோ்தல் பிரச்சார கூட்டம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில், சாய்ந்தமருது மக்களினால் மிக நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதுடன் அதனை பிரதேச சபையாக அல்லாது சாய்ந்தமருதிற்கு நகர சபை என்ற அந்தஸ்துடன் வழங்கப்படும். இதேவேளை கடந்த காலங்களில் கல்முனைப் பிரதேசம் இருந்தது போல் நான்கு சபைகளாக பிரிக்கப்படவுள்ளன. அதாவது கல்முனை மாநகர ...

மருதமுனை டெக்லாங் பாலர் பாடசாலையின் வரடாந்தப் பரிசளிப்பு விழா-2014

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை டெக்லாங் பாலர் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா-2014 அண்மையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. டெக்லாங் பாலர் பாடசாலையின் தலைவரும், கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரியுமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக  தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும்,“மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பவூண்டேசனின்” தவிசாளரும்,முகாமைதுவப் பணிப்பாளருமான ஏ.ஏ.முகம்மது நுபைல் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக  சப்ரகமுவ பல்கலைக் கழகப்  பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், கிழக்குப் பல்கலைக் கழக உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியை திருமதி ருபைதா சலாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன அறிவிப்பாளர் எம்.ஏ.எம்.நசிர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.  

முஸ்லிம் காங்கிரஸ் சமுகத்துக்கு மீண்டும் தீங்கு இழைத்துள்ளது - சேகு இஸ்ஸதீன்

Image
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கிழைத்த மற்றொரு மகா தவறு என அக்கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "மைத்திரியை ஆதரிப்பதான முஸ்லிம் காங்கிரஸின் முடிவு சிங்களப் பிரதேசங்களில் சிதறுண்டு வாழும் சகோதர முஸ்லிம்களின் சமாதான வாழ்வையும்இ பாதுகாப்பையும் சந்தியில் நிறுத்தி சிங்கள மக்களின் முஸ்லிம்கள் தொடர்பான அநுதாப உணர்வுகளுக்கு ஆப்பு வைத்துள்ளது. மு.காவின் நீண்ட கால மெளனத்துக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் நலன் சார்ந்த முடிவு வருமென்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முடிவு அரசாங்கத்தின் நல்லெண்ண நாட்டங்களுக்கு வேட்டு வைத்து சிங்கள - முஸ்லிம் கலவரங்களால் சீற்றமடைந்துள்ள வட-கிழக்கு முஸ்லிம்களின் வடிகான் தேடிய இன மத உணர்வுகளை இதமாக நெறிப்படுத்தும் சகல முயற்சிகளையும் தடுத்துள்ளது. மாறாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த உணர்வுகளையூட்டி முஸ்லிம்களை பகடை...

கல்முனைப் பிரதேச நீலப்படையணியின் பேரணியும், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனைப் பிரதேச  நீலப்படையணியின் பேரணியும்>  ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும் இன்று (29-12-2014)கல்முனை மாநகரில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும்  கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர்);> கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணி உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான்>கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்தப் பேரணி இடம்பெற்றது  இந்தப் பேரணி கல்முனை மாநகரில் இருந்து அப்பிரதேசமெங்கும் சென்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை  விநியோகமும் செய்தது

வலுவடைந்தது தாழமுக்கம்: இன்றும் பலத்த காற்றுடன் கடும் மழை

Image
தென்கிழக்கு கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங் களில் இன்றும் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் அதிகாரி லக்ஷ்மி லத்தீப் தெரிவித்தார். நாட்டின் நாலா பாகங்களிலும் அடிக்கடி மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் கடும் மழை பெய்யலாம் என்றும் 150 மில்லி மீற்றர் கூடுதலாக பெய்வதற்கான வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணித் தியாலத்திற்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை வீசுமென்றும் கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கடற்கரையை அண்டி வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வளி மண்டலவியல் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலி...

ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம்

Image
பி.முஹாஜிரீன்) அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு மற்றும்; சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம் தோன்றியுள்ளது. ஒலுவில் வெளிச்ச வீட்டை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக தென்னந் தோட்டங்கள், மீனவர் வாடிகள் மற்றும் கட்டடங்கள் என்பன கடல் அலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் பாதையும் முற்றாக சேதமுற்றுள்ளது. கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் மிக மோசமான கடலரிப்பு ஏற்படுவதோடு இக்கடலரிப்பைத் தடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.