கல்முனை வலயக் கல்வி அலுவகத்தின் நிரந்தர புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம்
29 வருடங்களுக்கு முன்னர் குண்டு வைத்து தகர்க்கப் பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவகத்தின் நிரந்தர புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் உட்பட முப்பெரும் விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) நடை பெற்றது.
1985 ஆம் ஆண்டு கல்விக் காரியாலயமாக இயங்கிய இந்தக் கட்டிடம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதையடுத்து இன்று வரை இவ்வலுவலகம் தற்காலிகமாக வாடகைக் கட்டிடங்களிலேயே இயங்கி வருகிறது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முயற்சியினால் அரசாங்கத்தின் முழுப் பங்களிப்போடு உலக வங்கியின் நிதியுதவியில் கல்முனை வலயக் கல்வி அலுவலக புதிய இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். முதற்கட்டமாக கட்டிட நிர்மாணப் பணிக்கு இதற்கென 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சமயப் பெரியார்கள் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வூ பெற்ற ஏ.ஜுனைதீன் பாராட்டிக் கௌரவிக்கப் பட்டார்.

Comments
Post a Comment