சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்று (29) திறந்து வைக்கப்பட்டன.
(அகமட் எஸ். முகைடீன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 6 வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்று (29) திறந்து வைக்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரசேத்தில் காணப்படுகின்ற அதிகமான வீதிகள் குறித்த திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாழ் மக்கள் குன்றும் குழியுமான வீதிகளினால் எதிர்கொண்ட பல்வேறுபட்ட அசௌகரிகங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு வீதி, கல்யாண வீதி, அல்-ஹிலால் வீதி, ஜி.எம்.எம்.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, மற்றும் ஒஸ்மன் வீதி ஆகியவற்றை மக்கள் பாவனைக்கா திறந்து வைத்தார்.
இதன்போது அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment