கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸ்டர் றியாஸின் முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கடின பந்து பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், சட்டத்தரணி றொசான் அக்தர், ஓய்வுபெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.