Posts

மட்டக்களப்பில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு.

Image
 

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

Image
மொரட்டுவ பல்கலைக்கழகம் TV Derana உடன் இணைந்து "Mora Lenz Media Awards 23" எனும் அகில இலங்கை அறிவிப்பு மற்றும் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்தது.  இலங்கையில் உள்ள 30ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் சார்பாக 2000ற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் முதல் கட்டத்தில் நுழைய கலந்து கொண்டனர்.  2வது கட்டத்தில், 40 பங்கேற்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இறுதிக்கட்டத்திற்கு 10 இளங்கலை மாணவர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.  University of Vocational Technology - Ratmalana பல்கலைக்கழகம் சார்பில் A.G.Mohamed Ajeeth இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி மிகவும் பெறுமதியான அகில இலங்கை- முதன்மை ஆங்கில அறிவிப்பாளர் சான்றிதழையும் பெற்றுக்கொடுத்தார்.

முன்னாள் மூதூர் எதிர்க்கட்சித் தலைவரின் ஒரு வருட சம்பளம் மீள கையளிப்பு சௌந்தரராஜன் அண்ணனுக்கு பாராட்டுக்கள்

Image
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம். சௌந்தரராஜன், தான் பிரதேச சபையினால் பெற்றுக் கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார். அவரது ஒரு வருட சம்பளம், இன்றையதினம் (21) அவரது சகோதரரான எம். சிவஞான மூர்த்தியினால் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸிடம் கையளிக்கப்பட்டது. மூதூர் பிரதேச சபையில் 1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றியபோது இவர் பெற்றுக் கொண்ட ஒரு வருட சம்பளத்தை, கொரோனா தொற்று காரணமாக வறுமையில் வாடும் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இப்பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாட்டாளிபுரம், வீரமாநகர், இலக்கந்தை, மீனாகேணி மற்றும் நல்லூர் ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப்பணம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸ் தெரிவித்தார் நண்பர் முன்னாள் மூதூர் பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் சௌ...

பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி

Image
ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு

Image
கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 20ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட வேண்டும் . எனினும்  அக்கரைப்பற்று  பொலிஸ்  பிரிவில்  ஊரடங்கு உத்தரவு  நீக்கப்படமாட்டாது

கொவிட்–19 அபாயம் நீங்கும்வரை தேர்தல் அறவிப்பை விடுக்கவேண்டாம்

Image
இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களுக்கு நேற்று (16) அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; 21.03.2020 திகதியிடப்பட்ட 2167/12 இலக்க விசேட வர்த்தமானியில், கொவிட்–19 தொற்று காரணமாக 2020 ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என தெரிவித்துள்ளீர்கள். பாராளுமன்ற சட்டத்தின் 24(3) என்று உறுப்புரைக்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த தீர்ம...

சுவிஸ் போதகர் ஊடாகவே யாழில் கொரோனோ பரவியுள்ளது

Image
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனர்.  எனவே மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறை களை சரியான பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளு மாறும் அவர் கேட்டிருக்கின்றார்.  யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது.  இதன்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30ற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போல் 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டது,  அதில் 1...

றியாஜ் , இஜாஸ் ஆகியோரின் கைதுகள் சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டியது !

Image
அரசியல் பழி தீர்க்க வேண்டாம் !! - முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் − சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் திடீர் கைதுகளை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டிய விடயமாகும். இதனை வைத்து யாரும் அரசியல் பழி தீர்க்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் சிறந்த சட்டத்தரணியாகும். இவரின் கைதினை சமூகம் கவலையுடன் பார்க்கின்றது. மேலும் றியாஜ் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்லாகவும் இருக்கலாம். இக்கைது நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்யும் தருணமில்லை என்பதை புரிந்து சகலரும் சமூக கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அரசின் தீர்மானத்தி...

கொரோனா வைரஸால் இதுவரை 21,19301 பேர் பாதிப்பு - 141945 பேர் பலி

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 2,064,668 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 1,441901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 508,826 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 141945 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:- அமெரிக்கா - 30,985 ஸ்பெயின் - 18,812 இத்தாலி - 21,645 பிரான்ஸ் - 17,188 ஜெர்மனி -3,80...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, CID யினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர், காலிங்க இந்ததிஸ்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில் தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், அவர் ஒரு சட்டத்தரணி எனும் வகையில் கலந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கைது இடம்பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம். தற்போது சட்ட ரீதியாகவும், இயல்பாகவும் இடம்பெறும் நிலுவையிலுள்ள விசாரணைகள் தொடர்பில் தலையிடும் நோக்கம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இல்லை. ஆயினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவரின் தொழில்சார் உரிமை தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அவரது கைதுக்கான காரணம் மற்றும் அதற்கான அட...

கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் ஜலீல் ஓய்வு பதில் பணிப்பாளராக புவனேந்திரன் கடமை ஏற்பு

Image
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தற்காலிக பதில் கல்விப்பணிப்பாளராக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இன்று  (16) கடமை பொறுப்பேற்றார் . வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் நேற்று (15) ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கும் வரை பதில் பணிப்பாளராக செயற்படும் வண்ணம்  பொறுப்புக்கள் கடமைகளை ஓய்வு பெற்ற  முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதிக்கல்வி பணிப்பாளர்   எஸ்.புவனேந்திரனிடம் கையளித்தார் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்  பணிப்பாளராக  கடமையாற்றிய  காரைதீவை சேர்ந்த  எஸ்.புவனேந்திரன் கடந்த காலத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வரை நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

Image
இன்றைய நாளில் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 238 பேர் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 65 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது 166 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

26,033 பேர் பலி - நிலை குலைந்த அமெரிக்கா!

Image
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,981,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1,392,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 478,425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸூக்கு இதுவரை 126,596 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 609,240 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26,945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்ற...

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அமல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image

மேலும் 4 பேருக்கு கொரோனா-214

Image
இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது 151 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு உலர் உணவு வழங்கியது

Image
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா  வைரஸ்  தொற்று  அசாதாரண நிலைமையின் போது  ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின்  அடிப்படை வசதிகளை  கருத்தில் கொண்டு கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாகத்தினரால்  அப்பள்ளிவாசல்  பிரதேசத்துக்குள் வசிக்கும்  ஊடகவியலாளர்களுக்கு  அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்  தலைமையில்  நேற்று இரவு (12) பள்ளிவாசல் நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற  நிகழ்வில்  குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாக சபை  செயலாளர் என்.எம்.நௌஸாத்  உட்பட நிருவாகிகளும் கலந்து கொண்டனர் 

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

Image
வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது. சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை பொலிஸாரின் மனிதாபிமான உதவி

Image
கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கல்முனை பொலிஸாரினால் உலருணவு  நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் தெரிவு  செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவு  நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு  கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பெரேராவின்  தலைமையில் நேற்று மாலை (11) பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடை பெற்றது. கல்முனை பொலிஸாரின் பங்களிப்புடன் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ,மருதமுனை,பெரியநீலாவணை  பிரதேசத்தை சேர்ந்த 60 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு உலருணவு  நிவாரணப் பொதிகள் வழங்கும்  நிகழ்வில் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர உட்பட பொலிஸ் அதிகாரிகள்  கலந்து கொண்டு உலருணவு  நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்

14ஆம் திகதி நீக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டம் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிப்பு

Image
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாவட்டங்களில்  ஊரடங்குச் சட்டம் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம்

Image
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் என்று தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு மதிப்பளிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேNளை, அனர்த்த மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.

கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் : கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது

Image
எமது நாட்டில் பரவிவரும் கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு நாட்டின் பல பகுதிகளிலும் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் கோரோனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் கிறுமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று  ஆரம்பித்துவைக்கப்பட்டது. உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரனையுடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாத் (ரஸாக்) அவர்களின் முயற்சியினால் தனது சொந்த நிதியின் பெறப்பட்ட கிறுமிநாசினிகள் தெளிக்கும் இயந்திரங்களை கொண்டு இவ்வேலைத்திட்டம் இன்று கல்முனை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் பகுதியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார், உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்வேலைத்திட்டம் கல்முனையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற ஏற்பாட்டாளர்கள் திட...

கொழும்பு தாமரை கோபுரத்தில் விஷேட நிகழ்வு

Image
கோவிட் 19 தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்களையும் பாராட்டும் விதமாக இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு தாமரை கோபுரத்தில் சிறப்பு கருப்பொருளுடன் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட உள்ளன.

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Image
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து விசே...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரண குணம்

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 54 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ,