கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு உலர் உணவு வழங்கியது
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா வைரஸ் தொற்று அசாதாரண நிலைமையின் போது ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாகத்தினரால் அப்பள்ளிவாசல் பிரதேசத்துக்குள் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நேற்று இரவு (12) பள்ளிவாசல் நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாக சபை செயலாளர் என்.எம்.நௌஸாத் உட்பட நிருவாகிகளும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment