தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் என் . எஸ் .எஸ் . அமீர் அலி நியமிக்கபட்டுள்ளார் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியதீன் அவருக்கான நியமன கடிதத்தை நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கையளித்துள்ளார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் சட்டத்தரணி வை .எல் .எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் முன்னால் அமைச்சர் அமீர் அலி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார் இவரின் தோல்விக்கு அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்க பட்டமை காரணமாக தெரிவிக்கபட்டது குறிபிடத்தக்கது
Comments
Post a Comment