முன்னாள் மூதூர் எதிர்க்கட்சித் தலைவரின் ஒரு வருட சம்பளம் மீள கையளிப்பு சௌந்தரராஜன் அண்ணனுக்கு பாராட்டுக்கள்



திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம். சௌந்தரராஜன், தான் பிரதேச சபையினால் பெற்றுக் கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார்.

அவரது ஒரு வருட சம்பளம், இன்றையதினம் (21) அவரது சகோதரரான எம். சிவஞான மூர்த்தியினால் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸிடம் கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச சபையில் 1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றியபோது இவர் பெற்றுக் கொண்ட ஒரு வருட சம்பளத்தை, கொரோனா தொற்று காரணமாக வறுமையில் வாடும் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இப்பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



பாட்டாளிபுரம், வீரமாநகர், இலக்கந்தை, மீனாகேணி மற்றும் நல்லூர் ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப்பணம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸ் தெரிவித்தார்

நண்பர் முன்னாள் மூதூர் பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் சௌந்தரராஜன் அண்ணனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்