இன்று மாலை வரை நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை


இன்றைய நாளில் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 238 பேர் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 65 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது 166 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்