Posts

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை

Image
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார்.  தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென இது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிர

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்

Image
தங்களிடம் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருந்தால் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இன்று அல்லது நாளை தங்களிடம் உள்ள ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பாக ஜனாதிபதியிடம் மகிந்த அறிக்கை

Image
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.  அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் மேற்படி முக்கியஸ்தர்களுக்குமிடையில் சிறு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு

உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின் உடல்களும் அடக்கம்

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின்  உடல்களும் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை களின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்

Image
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (01) இரவு 09.00 முதல் நாளை (02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 26 ஆம் திகதி மாலை முதல் அப்பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.  இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை

Image
இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை  இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள சவுதி தூதரகமானது, ட்விட்டர் மூலம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சவுதி அரேபியத் தூதரகம் தெரிவித்தது. உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில், 42 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

Image
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (30) மாலை 08 முதல் நாளை (01) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 21 ஆம் திகதி மாலை முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

Image
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (29) மாலை 6 முதல் நாளை (30) காலை 8 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 21 ஆம் திகதி மாலை முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

Image
அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  இதற்கமைய கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - மன்னார், கொழும்பு - மட்டக்களப்பு, கொழும்பு - திருகோணமலை - கொழும்பு – பதுளை ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவைகள் இடம்பெறும். இந்த நகரங்களில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை பகல் வேளையில் இடம்பெறும்.  அனைத்து அலுவலக மற்றும் புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் புகையிரத கட்

கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது மதத்திற்கு முரணானது

Image
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தினால் உயிரிழந்த அனைவரது ஆத்மசாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் முழுமையாகக் குணமடையவும் கொழும்பு பேராயர் இல்லத்தில் விசேட தேவ ஆராதனை இன்று காலை இடம்பெற்றது.  கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை நடத்தினார். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.  அதிமேற்றிராணியார் உரையாற்றுகையில் இந்தத் தாக்குதல் மனித செயற்பாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும் என்று தெரிவித்தார்.  கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது முழுமையாக மதத்திற்கு மாறுபட்ட ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்; 5 மணி முதல் மீண்டும் அமுல்

Image
கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் மீண்டும் அமுல் கிழக்கு மாகாணத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் காலை 10.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாலை 5.00 மணியிலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரை அந்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தின் வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து என்று முற்பகல் 10.00 மணியளவில் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின், முக்கிய அறிவிப்பு

Image
இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வௌியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வகையில் ஊடகமொன்றை பயன்படுத்தினால், அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் பிரிவினரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு அல்லது அமைப்புக்களுக்கு எதிராக அவசர கால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Image
தற்கொலைதாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் சஹரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  கபூர் என்றழைக்கப்படும் மொஹம்மட் ஷரீவ் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இப்படியும் நடக்கிறது முஸ்லீம் மக்கள் அவதானம்

Image
வெல்லவாய, மஹவெல்லகம முஸ்லிம் வீடொன்றின் முன்னாள் வெடிபொருள் ஒன்றை மறைத்து வைக்க முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த வீட்டின் உரிமையாளர் தொழுகைக்காக மசூதிக்கு சென்று திரும்பி வரும் போது தனது வீட்டிற்கு முன்னாள் சிலர் சந்தேககத்திற்கிடமான முறையில் நடந்து கொள்தை அறிந்த அவர் உடனடியாக பொலிஸாரிற்கு அழைப்பு விடுத்து குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.  இதன்போது அவர்களிடம் இருந்து வெடிபொருள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  குறித்த நபர்கள் இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்தவதற்காக குறித்த முஸ்லிம் நபரின் வீட்டிற்கு முன்னாள் வெடிபொருளை மறைத்து வைப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடன் தேடப்பட்ட இருவர் கைது

Image
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் அராபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று (27) நாவலபிட்டி பொலிஸார் இராணுவத்தினர் விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கப

கிழக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் அழிக்கப்படும்

Image
இராஜாங்க அமைச்சர்  ஹரீஸ்  தெரிவிப்பு  கிழக்கு முஸ்லிம்கள்  இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்புடன் சர்வதேச பயங்கரவாதம் வெகு விரைவில் முடிவுக்கு வரும். இதற்காக  அரச படைகளுக்கு  ஜம்மியத்துல் உலமா உட்பட நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என உள்ளூராட்சி மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்களின் புனித தினத்தன்று  ஈனச் செயல்  புரிந்த  தற்கொலைதாரிகள் குறிப்பிட்ட  சிலரின் நடவடிக்கையை கண்டித்தும் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம் பெற்ற தற்கொலை சம்பவம் தொடர்பாக கருத்து  வெளியிடும் போதே  இதனை தெரிவித்தார் . இந்த ஊடகவியலாளர் மாநாடு  கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று  ஞாயிற்றுக் கிழமை  நடை பெற்றது . இந்த ஊடக மாநாட்டில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரகீப் கலந்து கொண்டார்  அங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கும் போது  இலங்கையில்  இரண்டு வருடமாக இந்தப் பயங்கரவாதிகளின் பெயர் வீசப்பட்டது ஆனால் இவ்விடயத்தில்  நமது நாட்டுப் புலனா

வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல்?

Image
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30 ஆம் திகதி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

“நாம் இலங்கையர்”என்ற ரீதியில் முஸ்லிம்களின் எதிர்காலசெயற்பாடுகள் சகவாழ்வுக்கு முன்னுரிமை வழங்குவதாக அமைய வேண்டும்.

Image
மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் அறிக்கை. (கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்) யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் சென்ற ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடாத்திய சம்பவத்தை மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- “இஸ்லாம்” சாந்தி சமாதானம் சக வாழ்வு என்ற அர்த்தத்தைக் கருதுகின்ற ஒரு அறபுச் சொல் என்ற வகையில் அதிலிருந்து பெயரெச்சமாக வரும் முஸ்லிம் என்ற சொல் “சாந்தியளிப்பவன்” சமாதானத்தை உருவாக்குபவன் என்ற அர்த்தங்களில் கையாளப்பட்டு வருகின்றது. எனவே இஸ்லாம் ஒரு போதும் வன்முறைச் சம்பவங்களையோ பயங்கரவாத தாக்குதல்களையோ தற்கொலை தாக்குதல்களையோ ஆதரிக்கவில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இலங்கை வாழ் முஸ

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் இயக்கங்களுக்கு தடை

Image
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் - National Thawheed Jammath (NTJ)  மற்றும்  ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் - Jamathei Millathu Ibraheem zeilani (JMI)  ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2019.04.27 

சம்மாந்துறை வீட்டில் மீட்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியீடு

Image
நேற்றைய தினம் (26)  சம்மாந்துறையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் , தீவிரவாதிகளுடையது என தெரிவிக்கப்படும் 119 பொருட்களின் பட்டியலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதில் தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள் ஆகியன மீட்கப்பட்டிருந்தன. அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (26) பிற்பகல் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு கோளங்கள்), 150 ஜெலிக்னைற் குச்சிகள், ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று, உள்ளிட்ட 119 பொருட்கள் மற்றும் வேன் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

Image
இன்று (27) இரவு 10.00 மணி முதல் நாளை (28) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. கல்முனை, சவளகடே மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரும் வரை  ஊரடங்குச் சட்டம்  நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை தாக்குதல்கள்; 15 சடலங்கள் மீட்பு (UPDATE)

Image

சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை தாக்குதல்கள்; 15 சடலங்கள் மீட்பு (UPDATE)

Image
நேற்று (26) இரவு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த வீட்டை சோதனை செய்வதற்காக நெருங்கிய வேளையில், குறித்த வீட்டிலிருந்து பொலிசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டினுள் இருந்த தற்கொலை தாக்குதல்தாரிகளினால் குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது வீட்டினுள் தற்கொல

தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தை முற்றாக தடைசெய்ய வேண்டும்

Image
ஜனாதிபதியிடம் சு.க. கோரிக்கை நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பையும் அதற்கு அனுசரணை வழங்கியுள்ள அனைத்து சக்திகளையும் அவசரகால சட்டத்தின்கீழ் பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்த அமைப்பை தடைசெய்யும்போது அவர்களுடைய ஆயுத பாவனை, உரைகள், ஆட்சேர்ப்பு, வகுப்பு எடுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படாலும் இந்த செயற்பாடுகள் யாவும் மிகவும் ஆழமான முறையில் கையாளப்பட வேண்டும் என்றும் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார். இந்த அமைப்பு தொடர்பில் 2013 இல் அறியப்பட்டாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே இதற்கு அவசியமான வகையில் சட்டத்திலும் திருத்தங்கள் முன்னெடுனக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்திலும் இந்த அமைப்பை தடை செய்ய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்

Image
எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க தேவையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக் கிழமை சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விஷேட அறிக்கை ஒன்றை விடுத்து எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றுகையில், விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.  வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை.  விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறினார்.  (