Posts

கல்முனை செலான் வங்கி கிளையின் சிறுவர் சந்தை Tikiripola

Image
கல்முனை செலான் வங்கி கிளையின் அனுசரணையுடன் கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற  சிறுவர் சந்தை  வெற்றியளித்துள்ளதாக  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ்  தெரிவித்தார் . மாணவர்களின் கல்விக்கு  உதவும் வகையில்  சிறுவர் சேமிப்பு பழக்கத்தை  சிறுபராயத்தில்  இருந்தே  ஊக்குவிக்கும் திட்டம்  செலான் வாங்கி கிளையினால் அறிமுகப் படுத்தப் பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில்  இந்த சிறுவர்  சந்தை  திடடம் அமுல் படுத்தப் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்  கடந்த வியாழக் கிழமை (08)  கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் சிறுவர் சந்தை  கல்லூரி அதிபர்  அருட் தந்தை பிரைன் செல்லர்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் உட்பட  வாங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ,வங்கி உத்தியோகத்தர்கள் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர் 

மருதமுனையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை

Image
  கல்முனை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட மருதமுனையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி இனந்தெரியாதோரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று(10) சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் மருதமுனையை சேர்ந்த 73 வயதான சீனித்தம்பி பாத்தும்மா என்பவராகும்.  இவரது சடலம் பெரிய நீலாவணைப் பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் இன்று(11) அதிகாலை 12.30 மணிக்கு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப்பட்ட மூதாட்டி நேற்று நோன்பு நோற்றுள்ளார். நோன்பு திறப்பதற்கு அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பேரீத்தம் பழம் வாங்கி வந்ததை அயலவர்கள் கண்டுள்ளனர். வீட்டுக்கு வந்து நோன்பு திறந்தபின்னர் மஃரிப் தொழுகை நிறைவேற்றி விட்டு மீண்டும் அதே கடைக்கு வெற்றிலை வாங்கி வரச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் பின்னரே இவரை உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். இதே வேளை கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பேரப் பிள்ளை முச்சக்கர வண்டியொன்றில் மூத்தம்மா சென்றதாக கூறுகின்றார். இதேவேளை அந்த மூதாட்டியின் கழுத்தில் 4 பவுண் தங்க சங்க

தலைமைத்துவ மாற்றங்கள் தேவையின் நிமித்தம் நிகழவேண்டிய நிதர்சனமான நிகழ்வே

Image
கிழக்கின் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து புத்திஜீவிகளின் அனுசரனையுடன் செப் 16ம் திகதி மேற்க்கொள்ளப்படும் முஸ்லிம் சுய நிர்ணய உரிமைப்பிரகடணம் முஸ்லிம் தேசியத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அபிலாஷைகளையும் அபிவிருத்திகளையும் உள்ளடக்கிய பெரும் கோட்பாடாகும். இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வாழுவதற்கான ஒட்டுமொத்த உரிமைகளை உள்ளடக்கும் ஒற்றை செல்லே 'சுயநிர்ணயமாகும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து நம்மை நாமே ஆழவேண்டும் என்ற ஐ.நாவால் உத ்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு இலங்கை முஸ்லிம் தேசியமும் உரித்துடையது என்பதை மீள்பிரகடணம் செய்வதே கிழக்கின் எழுச்சியின் நோக்கமாகும். எந்தவொரு முஸ்லிம் தேசிய எழுச்சிக்கும் மக்களின் கணிசமான அங்கீரம் பெற்ற முஸ்லிம்களின் பேரியக்கமான முஸ்லிம் காங்கிரஸின் தனித்தலைமையை வேறு பல காரணங்களுக்காகவும் ஒதிங்கி வழிவிடுமாறு வினையமாய் வேண்டினோம். மு.காவின் ஸ்தாபிப்பில், அதன் அடிப்படை கொள்கை பகுப்பில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்தாபகர்களின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்ட கிழக்கின் எழுச்சியின் இர

கல்முனை வீடொன்றில் அதிர்வு தரை ஓடுகள் வெடித்து சிதறியுள்ளன

Image
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியை ஒருவரின் வீட்டில்  நில  அதிர்வு  உணரப்  பட்டுள்ளது. இதனால்  ஆசிரியையின்  வீட்டு  தளத்தில்  வெடிப்பு ஏற்பட்டு  தளத்தில்  பதிக்கப் பட்டிருந்த தரை ஓடுகள் (Tiles)   உடைந்து சிதறியுள்ளதுடன் , வீட்டின் முன்னால்  உள்ள சுற்றுமதிலின்  ஒரு பகுதியிலும் சிறிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  சம்பவம்  கல்முனை -03 ஆனை  கோயில்  வீதியில்  விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்  முன்பாக உள்ள  வீட்டிலேயே  இடம் பெற்றுள்ளது. இன்று இரவு 8.45 மணிக்கு  இடம் பெற்றதாக  வீட்டு உரிமையாளரான  ஆசிரியை தெரிவித்தார் . சம்பவம் தொடர்பாக  ஆசிரியை  பெற்றிக்  உஷா  என்பவர் கூறுகையில்  எனது பிள்ளைகள்  படித்துக் கொண்டிருந்தார்கள் .நான்  பாடசாலை வேலை  செய்து கொண்டிருந்தேன் அந்த வேளை  வீட்டுக்குள் பட பட வென்ற சத்தம்  கேட்டது  அந்த வேளை   வீட்டுக்குள் சற்று நடுக்கம் போன்று  உணர்வு ஏற்பட்டது .  அதே கணம் வீட்டுக்குள் தரைக்குப்  பாதிக்கப் பட்டிருந்த  தரை ஓடுகள் அரை அடி  உயரத்துக்கு  மேலே கிளம்பி உடைய தொடங்கின . சம்பவத்தை பார்த்த நான்  அச்சம் காரணாமாக  எனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு  வீட

நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிக்கு நிதி கையளிப்பு!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின்  நிதியிலிருந்து நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கான இரண்டாம் கட்ட நிதி  ரூபா 5இலட்சம்  இன்று பள்ளிவாசல் நிருவாகிகளிடம்  வழங்கப் பட்டது   இந்த  நிதி வழங்கும் நிகழ்வு இன்று (10) சனிக்கிழமை பிரதி அமைச்சர் ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிதி விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நற்பிட்டிமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.ஐ.அமீர் ஊடாக நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி எம்.நாசர் கனி தலைமையிலான பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்து வைக்கப்பட்டது. தலைவர் ரவூப் ஹக்கீம்  நட்பிட்டிமுனை  ஜூம்ஆப் பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிக்கு இதுவரை 15இலட்சம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  - ஊடகப் பிரிவு -

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வறிய குடும்பங்களுக்கு சீமெந்து வழங்கி வைப்பு

Image
தேசிய வீடமைம்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  முயற்சியில் கல்முனை பிரதேச வறிய குடும்பங்களுக்கு சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (2016/09/10) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் AM.இப்ராஹிம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் K.இராஜதுரை  ,திவிநெகும தலமைப் பீட   முகாமையாளர் ARM.சாலிஹ்,கிராம சேவை   நிர்வாக உத்தியோகத்தர் A பஸால்.என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேசசெயலக சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்

Image
( அப்துல் அஸீஸ்) சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு ( செப்டம்பர் ௦8)   5௦வது வருட நிறைவையொட்டி கல்முனை பிரதேசசெயலக திவிநெகும பிரிவினால் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் (08) கல்முனை  பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் 68 வறிய மாணவர்களுக்கு ‘சிசுதிரிய’ புலமைபரிசில் பெறுவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணரீதியான விளையாட்டு போட்டியில் இவ்வருடம் த ங்கப்பதக்கம்களைப் பெற்ற   ௦9 மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர். திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர்    எ.ஆர் .எம். சாலிஹ்,  தலைமையில்  இடம்பெற்ற  இந்நிகழ்வில்  அம்பாறை மாவட்ட திவிநெகும பணி ப்பாளர் சந்தரூபன் அனுருத்த, கல்முனை  பிரதேச செயலாளர்   எம்.எச். முகம்மட் கனி,  மாவட்ட திவிநெகும திட்ட முகாமையாளர் யு.எல்.எம். சலீம்    திட்ட  முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா, திவிநெகும வங்கி-வலய முகமையாளர்களான எஸ்.எஸ்.சதீஸ், எம்.எம்.எம்.முபீன், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.ஸலாம், ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் ரிலா  உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண

கல்முனை அன்னைவேளாங்கண்ணி ஆலய திரு விழா ஆரம்பம்

Image
கல்முனை அன்னைவேளாங்கண்ணி ஆலய வருடாந்த  திரு விழா   இன்று (09)கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.    சனிக்கிழமை   திரு சொரூப ஊர்வலம் இடம் பெற்று  ஞாயிற்றுக்  கிழமை  திருப்பி பலி பூசையுடன்  வருடாந்த திரு விழா நிறைவு பெறும் 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்து

Image
கல்முனை பொலிஸ்  நிலைய  தலைமைக்  காரியாலய  பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து   இடமாற்றம் பெற்று    கம்பஹா  மாவட்டதுக்கு    செல்லும் கல்முனை  பொலிஸ்  நிலைய தலைமைக் காரியாலய  பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.அப்துல்  காப்பாருக்கு  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில்  பொருளாளர்  யு.எம்.இஸ்ஹாக் மற்றும் முன்னாள் பொருளாளர்  பீ.எம்.எம்.ஏ . காதர்  ஆகியோர்   வாழ்த்து தெரிவித்தனர் 

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தேசத்தின் பாதுகாவலன் கெளரவம் - நட்பிட்டிமுனை மக்கள் சார்பில் பாராட்டு

Image
கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிக்கு தேசத்தின் பாதுகாவலன் கெளரவம்  - நட்பிட்டிமுனை மக்கள்  சார்பில்  பாராட்டு  கல்முனை பொலிஸ்  நிலைய  தலைமைக்  காரியாலய  பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து  தன்  விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற்று  தான் வசிக்கும்  கம்பஹா  மாவட்டதுக்கு    இடமாற்றம் பெற்று செல்லும் கல்முனை  பொலிஸ்  நிலைய தலைமைக் காரியாலய  பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.அப்துல்  காப்பாருக்கு  நட்பிட்டிமுனை மக்கள் சார்பில்  பொலிஸ் நிலையத்தில்  நேற்று மாலை  பாராட்டி  நினைவு சின்னம்  வழங்கியதுடன் தேசத்தின் பாதுகாவலன்  இரத்தின தீபம்  விருதும் வழங்கப் பட்டது .  நட்பிட்டிமுனை  அல் - கரீம் நெசவாளர் மற்றும்  கைத்தொழில் சமூக அபிவிருத்தி  அமைப்பின்  தலைவர்  சி.எம்.ஹலீம்  தலைமையில்  கல்முனை பொலிஸ் நிலையத்தில்  நடை பெற்ற  நிகழ்வில்  அமைப்பின்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , அமைப்பின்  ஆலோசகர்களாக  செயற்படும் எம்.ஏ.எம்.இல்யாஸ் ,யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று  நடைபெற்றது. பிரதேசசெயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்தும் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டிலிருந்தும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் கே ராஜதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர் கல்முனை பிரதேசத்தில் உள்ள  சுமார் 50க்கும் மேற்பட்ட கழகங்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு

Image
பாண்டிருப்பு  ஸ்ரீ வட பத்திர காளி  அம்மன்  ஆலய வருடாந்த தீ மிதிப்பு  இன்று  புதன் கிழமை(14) இடம்   பெற்றது . மகாபாரத  இதிகாச நாயகர்களான  பாண்டவர்கள் பதி எனப் போற்றப் படும்  அருள் வளமும்  திருவளமும்  நிறைந்து  தெய்வருள்  சக்திகளை  தன்னகத்தே  கொண்டு அருளாட்சி செய்யும்  பாண்டிருப்பு புண்ணிய பதியில்   கோயில் கொண்டு  நாடி வரும்  பக்தர்களுக்கு  வேப்ப மர  நிழலில்  மகா சக்தியாக  விளங்கும் அன்னை ஸ்ரீ  வட  பத்திர காளியம்பாளின்  வருடாந்த உற்சவப் பெரு விழா   செவ்வாய்க்கிழமை (06)  திருக்  கதவு திறத்தலுடன் ஆரம்பமானது