கல்முனை செலான் வங்கி கிளையின் சிறுவர் சந்தை Tikiripola

கல்முனை செலான் வங்கி கிளையின் அனுசரணையுடன் கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற  சிறுவர் சந்தை  வெற்றியளித்துள்ளதாக  வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ்  தெரிவித்தார் .

மாணவர்களின் கல்விக்கு  உதவும் வகையில்  சிறுவர் சேமிப்பு பழக்கத்தை  சிறுபராயத்தில்  இருந்தே  ஊக்குவிக்கும் திட்டம்  செலான் வாங்கி கிளையினால் அறிமுகப் படுத்தப் பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில்  இந்த சிறுவர்  சந்தை  திடடம் அமுல் படுத்தப் பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில்  கடந்த வியாழக் கிழமை (08)  கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையில் சிறுவர் சந்தை  கல்லூரி அதிபர்  அருட் தந்தை பிரைன் செல்லர்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் உட்பட  வாங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ,வங்கி உத்தியோகத்தர்கள் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர் 









Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்