Posts

கல்முனை பிரதேச செயலக வீரமகளீர்களுக்கான கெளரவிப்பு

Image
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு       செய்யப்பட்ட   மகளீர் களுக்கான  வீடமைப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும்,    மகளீர் கெளரவிப்பு நிகழ்வுகள்  நேற்று(24) மாலை  பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் விஷேட விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  தெரிவு செய்யப்பட்ட 6  மகளீர்களுக்கான   விடமைப்பு     சா ன்றிதழ் வழங்கப்பட்டதுடன், பிரிவுரீதியாக இனம்கானப்பட்ட 31 வீரமகளீர்களுக்கான  கெளரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றது. திவிநெகும முகாமைதுவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா தலைமையில்  இடம்பெற்ற  இந்   நிகழ் வில்  திவிநெகும  பிரதேச அதிகாரி எ.ஆர்.எம். சாலிஹ் பிரதம அதிதியாகவும்   திவிநெகும திட்ட முகாமையாளர் எ.சி. அன்வர், மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ். சைலஜா,  திவிநெகும    முகாமையாளர் களான எஸ்.சதீஸ், எம்.எம்.எம். முபீன், வங்கி  உதவி  முகாமயாளர்களான எஸ்.எல்.ஏ.அசீஸ் , ஏ.எம்.நாசீர் ,அலுவலக அதிகாரி பி. மாஜிதா, கலாசார உதவியாளர் எஸ்.அகிலா பானு,  திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகதர் என்.எம். நெளசாத்  ஆகியோர்கள் உட்பட  பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொன்டனர்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர் களுக்கான நேரடி கேள்வி பதில்

Image
மத நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள  முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர் களுக்கான  நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி  எதிர்வரும்  சனிக்கிழமை (28)  காலை 9.00 மணி தொடக்கம்  பகல் 1.00 மணி வரை  கல்முனையில் நடை பெறவுள்ளது.  .கல்முனை  ஆசாத் பலஸ்  மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்  குர் ஆன் இறை வேதமா? இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா? என்ற தலைப்பில்  கேள்வி பதில் அமையவுள்ளது.  மாற்று மத சகோதரர்களுக்கான கேள்விகளுக்கு  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்  செயலாளர்  அப்துர் ராஸிக்  பதிலளிக்கவுள்ளார் . 9

சீகிரியாவின் புராதன சின்னங்களை மையினால் எழுதி குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Image
சீகிரியாவின் புராதான சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை  மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை நாளை  புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, புராதன சின்னங்களை மையினால் எழுதிய குற்றஞ்சாட்டின் கீழ் குறித்த மாணவி தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த மாணவி, புராதன சின்னங்களை மையினால் எழுதியதாக சீகிரியா பொலிஸாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் குறித்த மாணவி பல அதிகாரிகள் அரசியல் வாதிகள் ,சட்டத் தரணிகள் முயற்சியால் பொலிசாரினால் பிணையில்   விடுதலை செய்யபட்டார் இந்த நிலையில் சீகிரியா குன்றின் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் கீ

தமிழ் மொழி பயன்பாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு அம்பாரை அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்கவிட்ம் வேண்டுகோள்

Image
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தமிழ்  மொழி பயன்பாட்டு உரிமையை  உறுதிப்படுத்துமாறு கோரி கல்முனை அபிவிருத்தி போரம் அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்கவிட்ம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக துசித பீ வணிகசிங்க நியமிக்கப்டுள்ளதோடு இவர் தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதையடுத்து கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர் அனுப்பி  வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்படி வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.  அதில்மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது.கேகாலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய நீங்கள் அமபாரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கதாகும்.ஏற்கனவே மூவின சமூகங்கள் வாழும்பிரதேசத்தில் கடமையாற்றிய அனுபவங்கள் உங்களுக்கு இருந்தாலும் அம்பாரை மாவட்டத்தில் கடமையாற்றக்கிடைத்தமை நிச்சயமாக உங்களுக்குக்கிடைத்த பாக்கியம் என்பதை எதிர்காலத்தில்  நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நாம் நம்புகிறோம். பிரட்மன் வீரகோன் போன்ற சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் இம்மாவட்டத்தில் கடமையா

அம்பாரை மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திலக் பீ வணிகசிங்க

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் அம்பாரை மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திலக் பீ வணிகசிங்க இன்று   தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.. புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் உட்பட பிரதேச செயலாளர்கள்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

காணாமற் போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

Image
காணாமற் போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பூராகவும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை நடாத்தப்பட்டது. போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற் போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.  கல்முனை  தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக திரண்ட, காணாமற் போனோரின் உறவுகள், பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழு ஆக்கப் பட்டோருக்கான  செயற்பாட்டுக் குழுவின்  அனுசரணையுடன்  மாணவர் மீட்பு பேரணி ஏற்பாடு செய்த  இந்த அமைத்கிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள்  கல்முனை வடக்கு வைத்திய சாலை முன்பாக இருந்து ஒரு பிரிவினரும் கல்முனை இராம கிருஷ்ண மிசன் வித்தியாலயம் முன்பாக இருந்து  மற்றைய குழுவினருமாக  பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர் .  அமைதி ஊர்வலத்தில் சென்றவர்கள்  பக்க சார்பற்ற நீதி தேவை? ,அரசே எமக்கு பதில் தா ? , எங்கள் பிள்ளைகளை எங்களிடம் அனுப்பி வை ?, நாங்கள் படும் வேதனைக்கு பதில் தாருங்கள் ?, என் கணவரை என்ன

கல்முனையில் கார் விபத்து வைத்தியர் ஒருவருக்கு படுகாயம்

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசயடி அம்மாள் ஆலயத்திற்கு முன் உள்ள வளைவில் சனிக்கிழமை ( 2015.03.21) அதிகாலை 3.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கார், வீதியை விட்டு விலகி,   விபத்துக்குள்ளானது.   கொழும்பிலிருந்து கல்முனையை  நோக்கி சென்றுகொண்டிருந்த இக்காரே இவ்வாறு கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனது. சாரதியின் தூக்கம் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். நற்பட்டிமுனையைச் சேர்ந்த வைத்தியரின் காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் காரில் பயணித்த நான்கு பேரில் குறித்த வைத்தியரும் காரை செலுத்திய வைத்தியரின் சகோதரரும் காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த கல்முனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

193வது வருடாந்த கொடியேற்ற விழா ஆரம்பம்.

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனைக்  கடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற விழா  சனிக்கிழமை ( 21 . 03 . 2015) மாலை வெகு சிறப்பாக இடம் பெற்றது. இஸ்லாமியக் கணக்கீட்டின் படி இன்று முதற் பிறையன்று  இஸ்லாமிய பெரியார் அப்துல் காதிர் நாகூர் சாஹுல் ஹமீது மீராசாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் ஞாபகார்த்தமாக 193 வது வருட கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாகின்றது.  கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு  கடற்கரைப்பள்ளிவாசலின் மினராக்ககளில் ஏற்றப்பட்டது. பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் சன்மார்க்கப் பிரச்சாரங்கள், திக்று, ராத்திபு,மௌலித் ஆகிய விடயங்கள் இடம் பெறும். இவ்விழாவின் இறுதிநாளான்று கொடி இறக்கப்பட்டு விஷேட துஆப்பிரர்த்தனையுடன் கந்தூரி அன்னதானமும் இடம் பெறும்.

சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுவதற்கான ஜெமீலின் வங்குரோத்து அரசியல்

Image
(அகமட் எஸ். முகைடீன்) சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை கனிந்து  வந்த தருணங்களில்  இடையூறு விளைவித்து அக்கனவை கானல் நீராக்கிய கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இன்று மார் தட்டி இறுமாப்புடன் அக்கோரிக்கையை  வெண்றெடுக்க ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்திருப்பது அவரின் அரசியல் வங்குரோத்து தனத்தை காட்டுகின்றது என முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். எதிர் வருகின்ற  பாராளுமன்றத் தேர்தலில் குதிப்பதற்கான முன்னேற்பாடாகவே ஜெமீலின் இவ்வறிவிப்பு அமைகின்றது. சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுவதற்கான கோசமாக அவர் அதனைப் பயன்படுத்துகிரார், என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது கடந்த கால வராலாற்றை புரட்டிப் பார்க்கின்றபோது அவர் சாய்ந்தமருதின் அபிவிருத்திகளை தடுத்ததைத் தவிர வேறு எதனையும் செய்திருக்கவில்லை. சாய்ந்தமருதுக்கு ஒன்று நடக்க வேண்டுமானால் அது தன்னால் மாத்திரமே நடக்க வேண்டும் என நினைப்பவர் ஜெமீல். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஜெமீல் அரசியலுக்கு வந்த காலம் முதல் இன்றுவரை தன்னை வளப்படுத்தியதை தவரி வேறு எதனையும் செய்யவில்லை. ஊர் தொடர்பான பொது வ

கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம்

Image
( அப்துல் அஸீஸ் ) கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக  விண்ணப்பம்  கோரப்பட்டுள்ளது. கல்முனை  அலியார் வீதியில் அமைந்துள்ள அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் முழு நேர வதிவிட வசதியுடன் கிதாபு பிரிவுக்கான  அனுமதிக்காக மாணவர்களிடமிருந் து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேலும் இக் கல்லூரியில் இணைந்து   கொள்ளும் மாணவர்களுக்கு பாடசாலை கல்வியையும் போதிப்பதற்கான வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்ப முடிவுத்திகதி  25.03.2015 ஆகும். தொடர்புகளுக்கு ;  076 7878426  /  077 3462823 .

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய  மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய  முன்பள்ளி ஆராதனை மண்டபத்தில் இன்று நடை பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  கல்முனை தொகுதி  இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம். ஹலீம்  அனுசரணையுடன்  மலர் இணைய  வானொலியின்  ஏற்பாட்டில் நடை பெற்ற  இந்த ஊடக கருத்தரங்கில் மலர்  இணைய  வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எப்.எம்.ஷரீக்  பிரதான வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊடகம்  தொடர்பான விரிவுரை வழங்கினார் . நிகழ்வில்  கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய முன்னாள் அதிபருமான எஸ்.எம்.ஏ. ஜஹுபர்  பிரதம அதிதியாகவும், இலங்கை மின்சார சபை கல்முனை பிராந்திய மின் அத்தியட்சகருமான கே.சம்பந்தன் கௌரவ அதிதியாகவும் மற்றும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உட்பட  ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் . ஊடக பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு  அதிதிகளால் சான்றிதழ்  வழங்கப் பட்டதுடன்  நிகழ்வ

பொது மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட வருக்கெதிராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்சான் கல்முனை பொலிஸில் முறைப்பாடு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்சான்   கல்முனை பொலிஸில் பெரியநீலாவனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் வாஹித் ஜெசீல் என்பவருக்கெதிராக நிதிமோசடி தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இந்த முறைப்பாடு பற்றி சட்டத்தரணி துல்சான் கருத்து தெரிவிக்கையில் மேற்படி நபர் நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தன்னை தீவிர ஆதரவாளராக இனங்காட்டிக்கொண்டு எனது அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதுண்டு இந்த அடிப்படையில் என்னோடு நெருக்கமாக இருப்பதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொண்டு தன்னை என்னுடைய பிரத்தியேக செயலாளர் என்று கூறிக்கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதை தற்போதுதான் என்னால் ஆதாரபூர்வமாக கையும் களவுமாக பிடிக்க முடிந்தது. நான் என்னுடைய மாகாணசபை உறுப்பினர் பதவி முடிந்த பின்னர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். பல மாதங்களாக மருதமுனையில் வசிக்கவில்லை. இந்த வேளைகளில் என்னுடைய பெயரை பயன்படுத்தி நான் சுயதொழில் உதவித்திட்டங்கள் கொண்டுவருவதாகவும்  அதனை ஏழை எளிய மக்களுக்கும் ­­ஆதரவாளர

கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு நியமனம்.

Image
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு நியமனம் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டதுடன் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் உருவாக்க திட்டமிட்டிருந்த கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார். இதற்கமைவாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் தயாரித்து உருவாக்கப்பட்ட ஆவணங்களையும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சமர்ப்பித்தார்.  இதனையடுத்து மேலும் இந்த புதிய கல்முனை நகரத்தில் உருவாக்கப்படும் அவ்வாறான விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் அவற்றுக்காக தனியான குழுவொன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தி வேண்ட

மாவடிப்பள்ளி பாலம் 30 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி

Image
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை கல்முனை பிரதான வீதியிலுள்ள ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் ஊடகங்கள் மூலம் பேசப்பட்டு வந்த மாவடிப்பள்ளி தாம்போதி 30 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்திப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐம்பது வருடம் பழைமை வாய்ந்த இந்த தாம்போதி கடந்த அரசின் காரைதீவு தொடக்கம் சியம்பலாண்டுவ வீதின் புனரமைப்பின் போது அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்த போது இந்த வீதியினுடாக பிரயாணிக்க வேண்டிய நிலையில் பிரயாணம் செய்ய முடியாத வகையில் தாம்போதியின் மேல் நான்கடி நீர் பாய்ந்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அவர் இந்தப் பாலத்தின் விபரங்களை முழுமையாக கேட்டறிந்து கொண்டார். அதன் பின்னர் ஜனாதிபதி அவர்களினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த தாம்போதி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இந்த தாம்போதியி

கல்முனையில் புகையிதர ஆசன பதிவு நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை!

Image
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினூடாக இடம்பெறும் புகையிதரப் பயணத்திற்கான ஆசனங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக கல்முனையில் இயங்கிய ஆசன முற்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடம்; கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்; பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் ஆசன முன் பதிவு நிலையமொன்று கல்முனையில் இயங்கியது. 1983ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக அம்பாறை மாவட்ட மக்கள் கொழும்புக்குச் செல்வதற்காக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக கல்முனையில் இயங்கிய மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கான முன் ஆசனப் பதிவு நிலையம் மூடப்பட்டது. இந்நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பல்வேறு வழிகளில் கடந்த ஆட்சி