சீகிரியாவின் புராதன சின்னங்களை மையினால் எழுதி குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

சீகிரியாவின் புராதான சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை நாளை  புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, புராதன சின்னங்களை மையினால் எழுதிய குற்றஞ்சாட்டின் கீழ் குறித்த மாணவி தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த மாணவி, புராதன சின்னங்களை மையினால் எழுதியதாக சீகிரியா பொலிஸாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த மாணவி பல அதிகாரிகள் அரசியல் வாதிகள் ,சட்டத் தரணிகள் முயற்சியால் பொலிசாரினால் பிணையில்   விடுதலை செய்யபட்டார்
இந்த நிலையில் சீகிரியா குன்றின் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு,  சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த உதயசிறி எனும் யுவதியொருவரை கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சீகிரியா ஓவியத்தின் மீது  10 அல்லது 12 எழுத்துக்களில் தனது பெயரை எழுதிய இந்த யுவதிக்கு கடந்த மார்ச் 2ஆம் திகதி தம்புளை நீதவானினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை மீள்பரிசீலனை செய்யுமாறு மனுவொன்றும் தம்புள்ளை நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது
தற்போது  சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவயினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்