கல்முனையில் கார் விபத்து வைத்தியர் ஒருவருக்கு படுகாயம்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசயடி அம்மாள் ஆலயத்திற்கு முன் உள்ள வளைவில் சனிக்கிழமை ( 2015.03.21) அதிகாலை 3.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கார், வீதியை விட்டு விலகி,   விபத்துக்குள்ளானது.  

கொழும்பிலிருந்து கல்முனையை  நோக்கி சென்றுகொண்டிருந்த இக்காரே இவ்வாறு கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனது.

சாரதியின் தூக்கம் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நற்பட்டிமுனையைச் சேர்ந்த வைத்தியரின் காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் காரில் பயணித்த நான்கு பேரில் குறித்த வைத்தியரும் காரை செலுத்திய வைத்தியரின் சகோதரரும் காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த கல்முனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 


Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு