மாவடிப்பள்ளி பாலம் 30 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை கல்முனை பிரதான வீதியிலுள்ள ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் ஊடகங்கள் மூலம் பேசப்பட்டு வந்த மாவடிப்பள்ளி தாம்போதி 30 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்திப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐம்பது வருடம் பழைமை வாய்ந்த இந்த தாம்போதி கடந்த அரசின் காரைதீவு தொடக்கம் சியம்பலாண்டுவ வீதின் புனரமைப்பின் போது அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்த போது இந்த வீதியினுடாக பிரயாணிக்க வேண்டிய நிலையில் பிரயாணம் செய்ய முடியாத வகையில் தாம்போதியின் மேல் நான்கடி நீர் பாய்ந்து கொண்டிருப்பதை கண்ணுற்ற அவர் இந்தப் பாலத்தின் விபரங்களை முழுமையாக கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அவர்களினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த தாம்போதி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இந்த தாம்போதியின் 50 வருடகால வரலாற்றில் மழை காலத்தில் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் பல நூற்றுக் கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் நினைவு கூறக் கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

63 மீற்றர் நீளத்தையும் தற்போதுள்ள பாலத்தின் மட்டத்திலிருந்து 4 அடி உயத்தையும் கொண்ட நவீன பாலத்தின் நிர்மானப்பணிகளை அரசு டபிள்யூ.எம்.பி என்ற நிறுவனத்திடம் ஒரு வருட கால ஒப்பந்தத்துக்கு வழங்கியுள்ளதாகவும் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்தப் பாலத்தின் நிர்மானிப்பானது இந்த மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். அதனால் இந்த அரசுக்கு மக்கள் நன்றி கூறவும் தவறவில்லை.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்