கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு நியமனம்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு நியமனம்

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டதுடன் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் உருவாக்க திட்டமிட்டிருந்த கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

இதற்கமைவாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் தயாரித்து உருவாக்கப்பட்ட ஆவணங்களையும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து மேலும் இந்த புதிய கல்முனை நகரத்தில் உருவாக்கப்படும் அவ்வாறான விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் அவற்றுக்காக தனியான குழுவொன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்முனை நகர அபிவிருத்திக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனத் தலைவர்கள், மாநகர முதல்வர் உட்பட அதிகாரிகள் உள்ளடங்கலாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய முதற்கட்ட கூட்டத்தின்படி கல்முனை மத்திய நகர பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை நகர அபிவிருத்திக்கு பயன்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்க அதனை நிரப்புவது என்றும், சாய்ந்தமருது பிரதேசத்தில் குடியிருப்பு மற்றும் பொதுத் தேவைகளுக்காக 400 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்தென்றும், மருதமுனைப் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை நிரப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கல்முனைப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட பொது உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக மறைந்த தலைவரின் கனவான கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மருதமுனை,நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு,கல்முனை,சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களின் பொது உட்கட்டமைப்பு தொடர்பான தேவைகள் இங்கு ஆராயப்பட்டது குறிப்பிடத்தகக்தாகும்.

அதேபோன்று அம்பாரை மாவட்டத்தின் ஏனைய பல பிரதேசங்களின் பொது உட்கட்மைப்பு சம்பந்தமாகவும் அந்தப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஆராயப்பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்