Posts

கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு

Image
(சௌஜீர் ஏ முகைடீன்) கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (01.01.2013) காலை மாநகர முன்றலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் முதல்வர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அத்தோடு முதல்வர் ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கைலாகு கொடுத்து புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி எச்.என்.எம்.றம்சீன், மாநகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.நபார், ஏ.விஜயரட்னம் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இங்கு மாநகர முதல்வர் உரையாற்றுகையில். கடந்த மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த கல்முனை பிரதேச வாழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விட முடியாத துர்ப்பாக்கியமான நிலை காணப்பட்டது. இன்று நம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியின் பயனாய் அந்த கொடிய யுத்தம் முடிவுக்

கல்முனை மாநகர சபைக்கு நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பல தேவைகளை நிவர்த்திக்க அமைச்சர் அதாவுல்லா இணக்கம்!

Image
கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடத்தை அமைத்துத் தருவதாக மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இணக்கம் தெரிவித்தார்.கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழு இன்று (17.12.2012) காலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்குறித்த உறுதியினை வழங்கினார். கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடமின்மை, ஆளனி பற்றாக்குறை, நிர்வாக பிரிவின் உபயோகத்திற்கான வாகனம் இன்மை, திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உழவு இயந்திரங்கள் இன்மை, நூலகங்களை தரம் உயர்த்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் தொடர்பாகவும் முதல்வரினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக முதல்வரினால் அமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. மேற்குறித்த விடயங்களை நிவர்த்தி செய்து தருவதாகவும் கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிட அமைவிடத்தினை நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் அமைத்துத் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். இக்கலந்துரையாடலில் மா

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

Image
கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக பதவி வகித்து ஒய்வு பெற்ற திருமதி அருந்ததி நடராசாவுக்கு இன்று பிரியா விடை நிகழ்வு இடம் பெற்றது . மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலிதீன் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,நிருவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .

கல்முனை மாநகர சபையின் நியமனங்கள்

Image
கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் நடுக்கட்ட உத்தியோகஸ்தர்கள், பாவனையாளர்கள் சேவைக்கட்டணம் அறவிடும் உத்தியோகத்தர்கள் 29 பேர்களுக்கான நியமனம்  வழங்கும் நிகழ்வு இன்று (03) திங்கள் கிழமை கல்முனை மாநகர சபை முன்றலில் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.நௌஸாட் மற்றும் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், சீ.எம். முபீத், ஏ.எம்.அமீர், எம். நிஸார்தீன், எம்.ஐ.எம். பிர்தௌஸ், எம்.சாலிதீன், ஏ.அமிர்தலிங்கம், கே.கமலதாசன் ஆகியோருடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கணக்காளர் எம்.ரீ.சாலிதீன், நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.அக்றம் ஆகியோருடன், அசியா மன்ற நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், மற்றும் யுனொப்ஸ் நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட மாநகர சபை உயர் அதிகாரிகள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

பரீட்சார்த்திகளின் நலன் கருதி 01ஆம் ,08ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களம் திறந்திருக்கும்!

Image
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதி கருதி நாளை டிசம்பர் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் (சனிக்கிழமை நாட்களில்) ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அதன் ஆணையாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார். க. பொ. த. (சாத) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சில அதிபர்கள் இதுவரையும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் வார நாட்களுக்கு மேலதிகமாக சனிக்கிழமை நாட்களிலும் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அவர் மேலும் கூறினார். அக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்தி செய்யும் சகல மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இதுவரையில் தேசிய அடையாளஅட்டை பெற்றிராத அல்லது கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையில் ஏதேனும் அச்சீட்டுத் தவறுகள் காணப்படுமாயின் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் கேட்டுக்கொள்கிறார்.  தொலைபேசி இலக்கம் : 0112508022, 0112583122, 0112585043 பெக்ஸ் :  0112593634 மின்னஞ்சல் :  info@rpd.gov.lk

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர் பாட சாலை கலை விழா -2012

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை  வருடாந்த கலை விழா கடந்த 25.11.2012ஆந்  திகதி நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் ஆசிரியைகளான ஐ.றியாசா ,ஐ.றிசானா  ஆகியோர் தலைமையில் நடை பெற்றது . இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன்  ஆசிரியர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலை நிகழ்வுகளில்  பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் . வீ.எம்.சம்சம்  அதிபர் ,ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம் ,ஏ.ஜி.எம்.றிஷாத் ,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர் .