கல்முனை மாநகர சபையின் நியமனங்கள்
கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் நடுக்கட்ட உத்தியோகஸ்தர்கள், பாவனையாளர்கள் சேவைக்கட்டணம் அறவிடும் உத்தியோகத்தர்கள் 29 பேர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (03) திங்கள் கிழமை கல்முனை மாநகர சபை முன்றலில் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.நௌஸாட் மற்றும் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், சீ.எம். முபீத், ஏ.எம்.அமீர், எம். நிஸார்தீன், எம்.ஐ.எம். பிர்தௌஸ், எம்.சாலிதீன், ஏ.அமிர்தலிங்கம், கே.கமலதாசன் ஆகியோருடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கணக்காளர் எம்.ரீ.சாலிதீன், நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.அக்றம் ஆகியோருடன், அசியா மன்ற நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், மற்றும் யுனொப்ஸ் நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட மாநகர சபை உயர் அதிகாரிகள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment