பரீட்சார்த்திகளின் நலன் கருதி 01ஆம் ,08ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களம் திறந்திருக்கும்!


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதி கருதி நாளை டிசம்பர் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் (சனிக்கிழமை நாட்களில்) ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அதன் ஆணையாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

க. பொ. த. (சாத) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சில அதிபர்கள் இதுவரையும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் வார நாட்களுக்கு மேலதிகமாக சனிக்கிழமை நாட்களிலும் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்தி செய்யும் சகல மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இதுவரையில் தேசிய அடையாளஅட்டை பெற்றிராத அல்லது கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையில் ஏதேனும் அச்சீட்டுத் தவறுகள் காணப்படுமாயின் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் கேட்டுக்கொள்கிறார். 
தொலைபேசி இலக்கம் : 0112508022, 0112583122, 0112585043
பெக்ஸ் : 0112593634
மின்னஞ்சல் : info@rpd.gov.lk

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்