Posts

பூனானை, கண்டகாடு, தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மேலும் 501 பேர் வீடு திரும்பல்

Image
பூனானை, கண்டகாடு, தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மேலும் 501 பேர் வீடு திரும்பியுள்ளனர் பூனானை (இத்தாலியைச் சேர்ந்த 01 வெளிநாட்டவர் உட்பட 167 பேர்), கண்டகாடு (25) மற்றும் தியதலாவை (தென் கொரியாவைச் சேர்ந்த 03 வெளிநாட்டினர் உட்பட 309 பேர்) ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 501 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று காலை (27) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காலி,கொழும்பு,கண்டி கடவத்த, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தன...

ஒரே நாளில் 3000 பேர் பலி - இதுவரை உயிரிழப்பு

Image
​உயிர்க் கொல்லி வைரஸான கொரோனா வைரஸை (கொவிட் 19) ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27 ஆயிரத்து 365 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் சுமார் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 23 ஆயிரத்து 523 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 இலட்சத்து 31 ஆயிரத்து 722 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 9134 பேர் பலியாகி உள்ளனர். அதற்குஅடுத்த இடங்களில் ஸ்பெயின் (5138 பலி), சீனா (3295 பலி) ஆகிய நாடுகள் உள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கான எச்சரிக்கை!

Image
ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் குழுவினருக்கு மாத்திரம் தத்தமது நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி வீதிகளில் நடமாட முடியும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து பொலிஸ் பிணையின்றி தடுத்து வைக்கும் இயலுமை உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 கொரோனா நோயாளிகள் பூரண குணம்!

Image
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குணமடைந்த இருவரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 9 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இந்நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் நோயாளர்களும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை நாட்டில் 106 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் 8 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர். மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருட் கொள்வனவிற்கு கல்முனையில் மக்கள் கூடுவது ஆபத்தானது

Image
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவிக்கிறார் . யு.எம்.இஸ்ஹாக்  கோவிட் -19 கொராணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேசிய வேலைத் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்ட  போதிலும்  ஊரடங்கு சட்டம் தளர்த்தும் வேளையில் கல்முனை நகரத்தில் நடை பெறுகின்ற வர்த்தக நடவடிக்கைகள்  பாதுகாப்பற்றனவாகவே காணப்படுகின்றன.  கல்முனை நகரில் நடை பெறும்  வர்த்தக நடவடிக்கைக் காரணமாக  வைரஸ் தொற்று இலகுவாக  பரவுவதற்கான  சாதகமான சூழலே காணப்படுகின்றது.  இதற்கு  ஒரு போதும்  சுகாதார திணைக்களம்  உடன்படப்போவதில்லை என்று   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவிக்கிறார் . கல்முனை பிரதேசத்திலுள்ள  ஒவ்வொரு வீடுகளுக்கும் உணவுப் பொருட்கள் சென்றால் மாத்திரமே கல்முனை நகரில் ஒன்று கூடும்  மக்கள் தொகையை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவிக்கிறார். கோவிட் -19 கொராணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு கல்முனை மாநகர   முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீ...

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கோரோனா!

Image
பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Image
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மருந்துகளை கொள்வனது செய்து வீட்டுக்கே பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான ஊடக அறிக்கை

Image
மருந்துகளை கொள்வனது செய்து வீட்டுக்கே பெறறுக் கொள்ளுதல் தொடர்பாக சுகாதார அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, சுகாதார அமைச்சின் www.health.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமக்கு தேவையான மருந்துகளை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை மேலே,

வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Image
கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டினுள் வைரஸ் பரவலை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணியுடன் கொரானா வைரஸ் அறிக்கை

Image

வைரசால் திணறும் உலக நாடுகள்- கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது

Image
கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Image
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவின் போது எந்தவொரு நபரும் வீதிகளுக்கு வரக்கூடாது.

Image
மீண்டும் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு! நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது, ​​அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிக்குழு மக்கள் தொடர்ந்து அத்தியாவசிய உணவு மற்றும் பிற பொருட்களை வீட்டிலேயே பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது எந்தவொரு நபரும் வீதிகளுக்கு வரக்கூடாது. பணிக்குழுவால் அனுமதிக்கப்பட்ட விநியோக வாகனங்களை மட்டுமே வீதிகளில் இயக்க முடியும். ஊரடங்கு அனுமதி பத்திரம் இல்லாமல் வேறு எந்த வாகனத்தையும் இயக்க முடியாது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு நகர்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், சிறு , பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறை ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக Contact Sri Lanka

Image
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த வலை இணைப்பு அமைச்சின் இணைய தளமான www.mfa.gov.lk இல் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குள் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அணுகலாம். COVID - 19 பரவலை எதிர்த்து அரசாங்கத்தின் அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கும், விரைவான, வேகமான மற்றும் திறமையான சேவை வழங்கலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. COVID -19 பரவல் போன்ற அவசர நிலைமைகளின் போது வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இந்த தளத்தில் தம்மை பதிவுச்செய்து தமது உதவிகளை வழங்க முடியும். இந்த தளம் விரைவான நடவடிக்கைக்கு நிகழ்நேர தரவைப் பெற அமைச்சகத்தை அனுமதிக்கிறது. இந்த திறந்த அணுகல் தளம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்க ...

இந்தியாவில் சிக்கியுள்ள கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களின் கோரிக்கை

Image
இந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள், மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் அதனால் தாங்கள் மிகுந்த அச்ச நிலையில் உள்ளதாகவும் விரைவாக தங்களை இலங்கைக்கு அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பங்களை பிரிந்து தாங்கள் இங்கு கல்வி கற்பதற்காக வருகைதந்ததாகவும் தங்களை எவ்வளவு விரைவாக அழைத்துச்செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் கூட தாங்கள் காசுக்காக வாங்கும் நிலையில் தற்போதைய நிலையில் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்...

அரச துறையினருக்கான சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்

Image
அரச துறையினருக்கான மாத சம்பளம் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி முன்னர் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருள் கொள்வனவிற்கு கல்முனையில் மக்கள் வெள்ளம்

Image
  ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டதையடுத்து வெறிச்சோடிப் போயிருந்த கல்முனை நகரம் பொருட் கொள்வனவுக்காக சனத்திரளால் நிரம்பி வழிந்தது. கல்முனை கொரணா செயலணியின் திட்டப்படி இன்று  (26) கல்முனை பொதுச்சந்தை வியாபாரம் விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டதையடுத்து கல்முனை சந்தாங்கேணி மைதானம் மக்களால் நிரம்பி வழிந்தது. நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிசாரும், சுகாதார துறையினரும் மேற் கொண்ட நடவடிக்கைகளை தாண்டியும்  மக்கள் பொருட் கொள்வனவில் அக்கறை செலுத்தியதையும் மக்கள் அலைமோதியதையும்  அவதானிக்க முடிந்தது. எனினும் வங்கி மற்றும் வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காணப்பட்டனர் பொருட் கொள்வனவுக்காக கல்முனைக்கு வருகை தந்த மக்களை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு

Image
மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்...

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி , திறைசேரி அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

Image
மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்கம், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை பிற அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேரியை குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஷமனுக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதேபோல், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதான பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை சேவைத் தேவையின் படி ஒவ்வொரு நாளும் முழுநேர சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது நாளாகவும் நாட்டில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

Image
இன்றைய தினம் (26) மாலை 4.45 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்படி, இரண்டாவது நாளாகவும் நாட்டில் இதுவரை எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தற்போது நிலையில் முழுவதுமாக குணமடைந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தால் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி தற்போது மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

நான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு

Image
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குனர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை மக்களை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் வைத்து சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொரோனா ...

3 மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்

Image
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களில் தற்போது அமலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி

Image
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.