3 மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் தற்போது அமலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment