வைரசால் திணறும் உலக நாடுகள்- கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.
உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன.
உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.
Comments
Post a Comment