இந்தியாவில் சிக்கியுள்ள கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களின் கோரிக்கை



இந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள், மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.



இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் அதனால் தாங்கள் மிகுந்த அச்ச நிலையில் உள்ளதாகவும் விரைவாக தங்களை இலங்கைக்கு அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பங்களை பிரிந்து தாங்கள் இங்கு கல்வி கற்பதற்காக வருகைதந்ததாகவும் தங்களை எவ்வளவு விரைவாக அழைத்துச்செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் கூட தாங்கள் காசுக்காக வாங்கும் நிலையில் தற்போதைய நிலையில் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்