ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கான எச்சரிக்கை!
ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் குழுவினருக்கு மாத்திரம் தத்தமது நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி வீதிகளில் நடமாட முடியும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து பொலிஸ் பிணையின்றி தடுத்து வைக்கும் இயலுமை உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment