பூனானை, கண்டகாடு, தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மேலும் 501 பேர் வீடு திரும்பல்
பூனானை, கண்டகாடு, தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மேலும் 501 பேர் வீடு திரும்பியுள்ளனர்
பூனானை (இத்தாலியைச் சேர்ந்த 01 வெளிநாட்டவர் உட்பட 167 பேர்), கண்டகாடு (25) மற்றும் தியதலாவை (தென் கொரியாவைச் சேர்ந்த 03 வெளிநாட்டினர் உட்பட 309 பேர்) ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 501 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று காலை (27) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
காலி,கொழும்பு,கண்டி கடவத்த, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment