அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு
மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment