Posts

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற தரம் -1 வித்தியாரம்ப விழா அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்றது .

Image

நற்பிட்டிமுனை பிரதான வீதியில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற பாரிய விபத்து மூவருக்கு பலத்த காயம்

Image

கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் வெள்ளம் மாணவர்கள் சிரமம்

Image
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கும்  கல்வி பயில்வதற்கு சிரமப்படுகின்றனர் . சுனாமி அனர்த்தத்தின் போது  முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன்  தற்போது இயங்குகின்றது. மழை  ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட  வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது . இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகிறது. வெள்ள நீர் தேங்கியுள்ள இப்பாடசாலையின்பால் கல்முனை மாநகர சபை ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கல்முனை வலயக்கல்வி அலுவலகம்  கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,சுகாதார வைத்திய அ...

இராணுவம் விடுவித்த 38 ஏக்கர் காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மறுப்பு!

Image
காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.  மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (18) அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்படவிருந்தது.  இந்நிலையில், குறித்த காணி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்ற...

நற்பிட்டிமுனை அல் -அக்ஸாவை அழகுபடுத்தும் சிரமதானம்

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் நடவடிக்கையாக  பாடசாலையை அழகு படுத்தும் சிரமதானப்பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் தலைமையில் பழைய மாணவர் சங்க செயலாளர் சி.எம்.ஹலீம் நெறிப்படுத்தலில் உறுப்பினர்களால்  இன்று (15) இந்த சிரமதானப்பணி நடை பெற்றது 

கல்முனை மாநகர சபையில் தர்மகபீருக்கு மாநகர முதல்வரினால் அனுதாபம்

Image
முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.கபீர் அவர்களின் மறைவுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இன்று சபை அமர்வில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் விசேட பொதுச் சபை அமர்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எஸ்.ரி.கபீர் அவர்கள் காலம்சென்ற தகவலை சபைக்கு அறிவிப்பு செய்த முதல்வர், 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை அவர் எமது முன்னைய கல்முனை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் எனத் தெரிவித்தார். அத்துடன் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபையிலும் அவர் நீண்ட காலமாக அங்கம் வகித்து, பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன்   அன்னாரது சேவைகளை பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- என்று முதல்வர் குறிப்பிட்டார்.

பொத்துவில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல்

Image
(அகமட் எஸ். முகைடீன்) பொத்துவில் செல்வவெளி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (11) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். அஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், எம்.எச். கியாஸ், ஏ.எல். ஜுனைதா உம்மா, எஸ்.ரி. சபூறா உம்மா, எஸ். பகூர்டீன் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஜனூஸ், சட்டத்தரணி எம்.சி. பைசல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி. பசூர்கான், செல்வவெளி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  செல்வவெளி விவசாய காணி அமைந்துள்ள பிரதேசத்தில...

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகம்

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான  புதிய நிருவாகக் குழு தெரிவு கடந்த சனிக்கிழமை நடை  பெற்றது . கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை  பெற்ற  பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக கைத்தொழில் வணிக அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவருமான சி.எம்.ஹலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .  இணை  செயலாளர்களாக ஐ.எம்.உபைதுல்லாஹ் ,மௌலவி எச்.எம்.தானீஸ்  ஆகியோரும் பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ரவூப்  உட்பட 16 குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிருவாக குழு உறுப்பினர்களாக நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.எம்.அஸ்ரப் ஆசிரியர், நற்பிட்டிமுனை உலமா சபை செயலாளர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் ,நற்பிட்டிமுனை ஜும்மாபள்ளிவாசல் உப தலைவர் ஐ.எம்.நூர்முகம்மட் ,ஆசிரியர் எம்.ஏ.ஜெஸ்லி ,ஆய்வுகூட உதவியாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,கல்முனை  வீதி அபிவிருத்தி அதிகார சபை முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.பைதாஸ் ,மட்டக்களப்பு  மேல்நீதிமன்...

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா

Image
 வரலாற்றுக்  கட்டுரை  எழுத்தாளரும்  முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர்  பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர்  முன்னிலையில்  இந்த நூல் வெளியீட்டு  விழா இடம் பெற்றது.  சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு  விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல்  தேசிய நீர் வழங்கல்  மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், உள்ளுராட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.மன்சூர்  வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ...

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

Image
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார்.  அதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபேவர்தன, கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பு ஹர்த்தால் தொடர்பாக விசாரணை

Image
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலையிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரசாங்க வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் தலைப்பில் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இன்று 11ம் திகதி பூர்ண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசூரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது  இதனைடைுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய இரு அரச வங்கிகள் மூடப்பட்டுள்ளது.  இது தொடர்பாகவும் மற்றும் பூட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கிண்ணியடி பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் பதவிப்பிரமாணம்

Image
விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் இன்று   பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.