ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா



 வரலாற்றுக்  கட்டுரை  எழுத்தாளரும்  முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர்  பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெற்றது.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்  புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர்  முன்னிலையில்  இந்த நூல் வெளியீட்டு  விழா இடம் பெற்றது.
 சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு  விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல்  தேசிய நீர் வழங்கல்  மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், உள்ளுராட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.மன்சூர்  வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர்  எம்.ஏ. நுகுமான் வழங்கி யதுடன்  நூலின் அறிமுகவுரையை  தென்கிழக்குப் பல்கலைக்கழக  மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவும் நிகழ்த்தினர்
சபா நாயகர் கரு ஜெயசூரியவினால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியை மர்ஹும் மன்சூரின் புதல்வி அங்கு வாசித்ததுடன் நூலின் முதல் பிரதியை திருமதி ஸொஹரா மன்சூரிடமிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.
தமிழரசுக் கட்சி மூத்த உறுப்பினர் கே.ஏகாம்பரம், இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட அதிதிகளும் அங்கு உரை நிகழ்த்தியதுடன் பெருந்திரளான மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்