நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை




வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார். 
அதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபேவர்தன, கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்