Posts

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற வாணி விழா

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நவராத்திரி விழாவின் வாணி விழா வழிபாடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தவைமையில் இடம் பெற்றது  வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரகள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்அ,திபர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  நிழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் ச.சிவகுமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சைவ நற்சிந்தனை சிறப்புரை நிகழ்த்தினர்.  வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்ற வாணி விழா பூசை வழிபாடுகள் காரைதீவு  நந்தவனப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியா திலகம் இ.மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றதுடன் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்கவுகளும் இடம் பெற்றன.  இன மத பேதமின்றி வருடந்தோறும் நடை பெற்று வருகின்ற வாணி விழா நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்கவுளில் பங்குபற்றிய மாணவிகளுக...

இன்று பகல் கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 03 வாகனங்கள் பலத்த சேதம் மூவருக்கு படு காயம்

Image

சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம். சார்ள்ஸ்

Image
சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்பிற்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி சார்ள்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.   இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள உத்தியோகத்தரான திருமதி சார்ள்ஸ், கடந்த 26 வருடங்களாக அரச சேவையில் பணிபுரிந்து வருகிறார். வவுனியாவின் பிரதி அரசாங்க அதிபராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வர்த்தக வர்த்தக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் இரு முதுமாணி பட்டங்களை பெற்றுள்ளார்.   இதேவேளை, ஏற்கனவே சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய டப்ளியூ.ஏ. சூலாநந்த பெரேரா, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் ஹிஸ்புல்லாஹ் அவசர பேச்சு

Image
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மேற்பார்வையில் கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற சிங்கள தேசியவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு விளக்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சட்டம் ஒழுங்கை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.  அமைச்சர் சாகல ரத்னாயக்கவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கல்கிசை பகுதியில் இனவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கவலைத் தெரிவித்ததுடன், சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தினார்.   அத்துடன், சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைய இலங்கையின் நீதிமன்ற தீர்ப்புக்க அமைய கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்ய அகதிகளை வெளியேற்ற இனவாதிகள்; முயற்சி செய்துள்ளமை சட்டத்தை மீறிய பாரிய குற்றச்செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.  இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...

கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் ஸவ்பத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் புகழாரம்

Image
இந்தோனேசியாவில் நடை பெற்ற சர்வதேச இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில்  சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் ஸவ்பத்துக்கு  கல்முனை வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டு தெரிவித்துள்ளார் . கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் மற்றும் மாணவனை வழிப்படுத்திய ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் வழங்கிய அவரது பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்  தெரிவிப்பதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் . மாணவன் மொஹமட் ஸவ்பத் பெற்றுள்ள தங்கப்பதக்கம் கல்முனை கல்வி வலயத்துக்கும் , கிழக்கு மாகாணத்துக்கும்  ,கல்முனை ஸாஹிராவுக்கும் மொத்தத்தில் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக வலயக்  கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார் 

நல்லாட்சி பற்றிப் பேசிக் கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்கிறோமா?

Image
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கல்முனையில் ஆதங்கம் !! உண்மையான நல்லாட்சி என்று கூறுகின்ற விடயம் வெறுமனே வார்த்தைகளால் மாத்திரம் இருப்பதனால் உண்மையான நல்லாட்சியை மக்களுக்கு நிதர்சனமாக காட்ட முடியாமல் இருக்கின்றோம் .அதற்காக நாங்களும் திண்டாடுகின்றோம் . நாங்களும் நல்லாட்சி பற்றிப் பேசிக் கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற உணர்வு எங்களுக்கு உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கல்முனையில்  ஆரம்பித்து வைத்த கிழக்கு மாகாண விவசாயக் கண்காட்சி நிகழ்வில் குறிப்பிடடார்  தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கு மத்தியஅரசு .தடையாக இருக்கின்றது. மத்திய அரசு நிதி தர மறுக்கின்றது. விவசாய திணைக்களத்தின் அதிகாரத்தை மத்திய அரசு வைத்துக் கொண்டுள்ளது.  அதிகார பகிர்வு என்று கூறிக் கொண்டு இருக்கின்ற மத்திய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக இரவோடு இரவாக திருத்தங்களை செய்ய முடியும் என்றால் இவ்வாறான சிறிய விடயங்களை செய்யாமல் இருப்பது நல்லாட்சிக்கு நல்லதல்ல என்றார்.  நிகழ்வில் வடமாகண ...

மருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)  மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பான உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா   ஞாயிற்றுக்கிமை(24-09-2017)காலை 9.15 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்பத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி  சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதன்மை அதிதியாக பன்னூல் அசிரியர் எஸ்.எம்.மூஸா கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்வி, ஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முன்னிலை அதிதிகளாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட பிரதி ஆணையாளர் எம்.என்.எம்.அப்துல் காதர், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.தொடக்க உரையையும், வரவேற்புரையையும் ஊடகவியலாளர் ஜெஸ்மி.எம்.மூஸா நிகழ்த்தவுள்ளார். நூல் வெளியீட்டு உரை கவிஞர் சோலைக்கிளி,நூல் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,எழுத்தாளர் உமா வரத...

சிம்ஸ் கேம்பஸின் சான்றிதழ் வழங்கும் விழா !!

Image
சிம்ஸ் கேம்பஸ் கல்விநிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபாவின் முயறசியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உயர்கல்வியை முடித்த மாணவர்களுக்காக உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இலவசமாக கணனி , வர்த்தக துறையில் தொழில் சார்ந்த பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றுமாலை சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் சாய்ந்தமருது பேர்ல்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி எஸ்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.மேலும் இந்நிகழ்வில் உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட திட்டமிடல் பணிப்பாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் ,அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜேசு சகாயம் , திருமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.சரவணபவன், நிகழ்சசி திட்டமிடல் பணிப்பாளர் திரு.முகம்மது இர்பான் சிம்ஸ் கேம்பஸ் பிராந்திய நிலைய முகாமையாளர் சப்ரியா அஸீஸ் , விரிவுரையாளர்கள் ,உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள் ந...

ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்காக நற்பிட்டிமுனையில் போராட்டம்

Image
மியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியிலான ஒடுக்கு முறைத் தாக்குதலைக் கண்டித்து நற்பிட்டிமுனை முகையதீன் ஜும்மாப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் இன்று (22) நற்பிட்டிமுனையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.  இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நற்பிட்டிமுனை கிராமத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  பொது மக்கள் எனப் பெருமளவானோர் கொளுத்தும் வெயில் மத்தியிலும் கலந்து கொண்டனர். நற்பிட்டிமுனை முகையதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றிய மக்கள் பள்ளிவாசல் முன்பா ஒன்று திரண்டு  இன்று (22) பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம்இ அங்கிருந்து பேரணியாக நற்பிட்டிமுனை முச்சந்தி வரை சென்று அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மியான்மார் நாட்டில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க ஐக்க...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் இன்று (22.09.2017) காலமானார்கள்.-

Image

தமிழனுக்கு புகழ் சேர்த்த தங்க மகன் பாலுராஜ்

Image
பாராட்டி கெளரவித்தார்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் .   தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை  சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.  தமிழனுக்கு  புகழ் சேர்த்த தங்க மகன் என அவரை பாராட்டி வாழ்த்துப்  பா  வாசித்து  மாலை  அணிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன் .   இந்த  நிகழ்வு நேற்று மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்  எஸ்.பேரின்பராசா தலைமையில் இடம் பெற்றது. பாலூராஜின் தாய் அன்னம்மா  சௌந்தரராஜாவும் கலந்து கொண்டார்  இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்க...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஸ்ரப் மறைவின் 17ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எழுதப்பட்ட கட்டுரை.

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 17ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பயணத்தில் பக்கபலமாக  இருந்தவன் என்றவகையில் அவர் எமக்கு கற்பித்த அரசியல் பாடம் இக்காலத்தில் எந்தவகையில் பொருந்தும் என்ற ரீதியில் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.  மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலில் விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து   விட்டு விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர் என்றால் அது மிகையாகாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சேவை செய்த சிறந்த சமூக சேவகன்.  சிங்கள, தமிழ் சமூகத்தினருடனும் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிய தலைவர் அ...

கல்முனைத் தொகுதியில் தலைவர் அஷ்ரஃப் ஞபகார்த்த நிலையம் அமைக்க பிரகடனம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனைத் தொகுதியில் தலைவர் அஷ்ரஃப் ஞபகார்த்த நிலையம் அமைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே மேற்குறித்த பிரகடனத்தை வெளியிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மசூரா குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யு.எல்.ஏ கரீம் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எஹியா கான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியி...

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக கல்முனை நகரில் திரண்ட முஸ்லிம்கள்

Image
மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறித்தனத்தைக் கண்டித்து இன்று(15) கல்முனையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.  கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் பொது நிறுவனங்களின் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான துஆ பிரார்ததனையூம் , பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கும் நிகழ்வும்  இன்று இடம் பெற்றது. கல்முனை முகையதீன் ஜும்மாப் பெரிய பள்ளி வாசல் மற்றும் பல பள்ளி வாசல்களில் இன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பெருந் தொகையான முஸ்லிம்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கல்முனை நகரை அடைந்து அங்கு துஆ பிரார்த்தனை செய்தனர்.  பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு கோசங்களுடன் கல்முனை நகரில் திரண்ட மக்கள் தங்களது பலத்த எதிர்ப்பை அங்கு வெளியிட்டனர்  இந்த வெறித்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்க மகஜர் ஒன்றும் கல்முனை பிரதேச செயலகத்தில் ...