மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக கல்முனை நகரில் திரண்ட முஸ்லிம்கள்
மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறித்தனத்தைக் கண்டித்து இன்று(15) கல்முனையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் பொது நிறுவனங்களின் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான துஆ பிரார்ததனையூம் , பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம் பெற்றது. கல்முனை முகையதீன் ஜும்மாப் பெரிய பள்ளி வாசல் மற்றும் பல பள்ளி வாசல்களில் இன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பெருந் தொகையான முஸ்லிம்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கல்முனை நகரை அடைந்து அங்கு துஆ பிரார்த்தனை செய்தனர். பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு கோசங்களுடன் கல்முனை நகரில் திரண்ட மக்கள் தங்களது பலத்த எதிர்ப்பை அங்கு வெளியிட்டனர்
இந்த வெறித்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்க மகஜர் ஒன்றும் கல்முனை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
Comments
Post a Comment