ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்காக நற்பிட்டிமுனையில் போராட்டம்
மியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியிலான ஒடுக்கு முறைத் தாக்குதலைக் கண்டித்து நற்பிட்டிமுனை முகையதீன் ஜும்மாப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் இன்று (22) நற்பிட்டிமுனையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நற்பிட்டிமுனை கிராமத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கொளுத்தும் வெயில் மத்தியிலும் கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை முகையதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றிய மக்கள் பள்ளிவாசல் முன்பா ஒன்று திரண்டு இன்று (22) பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம்இ அங்கிருந்து பேரணியாக நற்பிட்டிமுனை முச்சந்தி வரை சென்று அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மியான்மார் நாட்டில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment