கல்முனைத் தொகுதியில் தலைவர் அஷ்ரஃப் ஞபகார்த்த நிலையம் அமைக்க பிரகடனம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனைத் தொகுதியில் தலைவர் அஷ்ரஃப் ஞபகார்த்த நிலையம் அமைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே மேற்குறித்த பிரகடனத்தை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மசூரா குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யு.எல்.ஏ கரீம் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எஹியா கான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment