மருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பான உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிமை(24-09-2017)காலை 9.15 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்பத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் முதன்மை அதிதியாக பன்னூல் அசிரியர் எஸ்.எம்.மூஸா கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்வி, ஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னிலை அதிதிகளாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட பிரதி ஆணையாளர் எம்.என்.எம்.அப்துல் காதர், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.தொடக்க உரையையும், வரவேற்புரையையும் ஊடகவியலாளர் ஜெஸ்மி.எம்.மூஸா நிகழ்த்தவுள்ளார்.
நூல் வெளியீட்டு உரை கவிஞர் சோலைக்கிளி,நூல் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,எழுத்தாளர் உமா வரதராஜன், ஆய்வாளர் சிறாஜ் மஸூர், சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்சூம் மௌலானா.டாக்டர் மலரா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.நூலின் முதல் பிரதியை சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜீதீன் பெறவுள்ளர்.
Comments
Post a Comment