கல்முனை செலான் வங்கி கிளையின் சிறுவர் சந்தை Tikiripola
கல்முனை செலான் வங்கி கிளையின் அனுசரணையுடன் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற சிறுவர் சந்தை வெற்றியளித்துள்ளதாக வங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் தெரிவித்தார் . மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் சிறுவர் சேமிப்பு பழக்கத்தை சிறுபராயத்தில் இருந்தே ஊக்குவிக்கும் திட்டம் செலான் வாங்கி கிளையினால் அறிமுகப் படுத்தப் பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இந்த சிறுவர் சந்தை திடடம் அமுல் படுத்தப் பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த வியாழக் கிழமை (08) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சிறுவர் சந்தை கல்லூரி அதிபர் அருட் தந்தை பிரைன் செல்லர் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் உட்பட வாங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ,வங்கி உத்தியோகத்தர்கள் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர் ...