Posts

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது ஹக்கீமின் அறிவிப்பு

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ரவூப் ஹக்கீம்  அறிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அதேவேளை, இவ்வறிவிப்பு இனவாதிகளின் முகங்களில் கரி பூசும் வகையில் அமைந்துள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் - சந்தேகங்களுக்கும் ஹக்கீம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்; நஸீர்; அஹமட் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்டமையினால் முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்பட்டது. இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் சில ஊடகங்களும், அமைப்புக்களும் திரிவு படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்தை ஏற்படுத்த முற்பட்;டது. குறிப்பாக இணையதளங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பரவலா...

பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 3 மாத சம்பளம் கடனடிப்படையில்!

Image
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்ளுடைய விடுமுறை அங்கீகரிக்கப்படவுள்ளதாகவும் மூன்று மாத சம்பளத்தை கடனடிப்படையில் வழங்கவுள்ளதாகவும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் பாரிய மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது இதனால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அன்றாட செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அடுத்து என்ன செய்வது என்பதறியாமல் தவித்துப் போயுள்ளனர். இந்நிலையை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சலுகைகளையும் நிதி உதவியையும் வழங்க வேண்டிய கடப்பாடு தற்போது காணப்படுகிறது. எனவே அவர்களுடைய விடுமுறையை அங்கீகரிப்பதுடன் மூன்று மாத சம்பளத்தை கடனடிப்படையில் வழங்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருக்கள்மட வீதி வளைவில் மோட்டார் சைக்கல் விபத்து ஒருவருக்கு காயம்

Image
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கல் குருக்கள்மட  வீதி வளைவில் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்தில்  மோதி விபத்து இடம் பெற்றுள்ளது   சாரதி கழுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். 

தினகரன் பிரதம ஆசிரியர் குணராசா அவர்களின் தந்தை கணபதிப் பிள்ளை மறைவு

Image
தினகரன் பிரதம ஆசிரியர்   குணராசா அவர்களின் தந்தை கணபதிப் பிள்ளை  92வது வயதில் இன்று (27) பகல் கல்முனை சின்னதம்பி  வீதியில் உள்ள அவரது  வீட்டில் காலமானார் . அன்னாரின்  நல்லடக்கம்  நாளை  மாலை 3.00 மணிக்கு  கல்முனை பொது மயானத்தில்  இடம் பெறவுள்ளது .

ஹாபிஸ் நசீரின் வைபவங்கள் பகிஷ்கரிப்பு

Image
கடற்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரை வைபமொன்றில் வைத்து, பிரமுகர்கள் மத்தியில் திட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் வைபவங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என இலங்கை முப்படை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், முப்படையின் முகாம்களுக்கு நுழைவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை, சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவமொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அவ்வைபவத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றதோடு, அதில் முதலமைச்சர் குறித்த அதிகாரியை திட்டும் காட்சி மாத்திரம் உள்ளடங்கியிருக்கின்றது. குறித்த காட்சி தொடர்பில் சமூக வலைத்தளங்களில், பலரும் பலவிதமான (எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும்) கருத்துகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  குறித்த காட்ச...

O/L விண்ணப்பம் ஜூன் 10 வரை நீடிப்பு

Image
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் ஜூன் 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்தி  குறித்த விண்ணப்ப முடிவுத் திகதியானது எதிர்வரும் மே 31 ஆம் திகதி முடிவடையும் நிலையில், வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களை கருத்திற்கொண்டு மேலும் 10 நாட்களுக்கு விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.   இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   க.பொ.த. சா/த பரீட்சைகள், எதிர்வரும் டிசம்பர் 06 தொடக்கம் டிசம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனது 10 வருட முயற்சிக்கு கிடைத்த பலன் பாலமுனை மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம்”

Image
கிழக்கு முதல்வர் ஹாபீஸ்  நஸீர் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க  செயல் என்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, ஆரயம்பதி- பாலமுனை மக்களுக்காக கடந்த 10 வருடகால எனது முயற்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரத்தினை, கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயலாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மட்டக்களப்பு, ஆரயம்பதி -  பாலமுனை கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நான் விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் சேவைகள் தலைவராக இருந்தேன்.  பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை கடலோரப்பகுதியிருந்து வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதற்காக அப்போதைய காணி அமைச்சர் தி.மு. ஜயரட்னவை நான் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தேன். அதன் பலனாக பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவரது அனுமதியுடன் தனியார் காணியொ...

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா

Image
(காமிஸ் கலீஸ்) கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வானது கடந்த 25.05.2016 புதன் கிழமை மஸ்ஜிதுல் பலாஹ் முன்றலில் (கடற்கரைத் திடல்) வெகு சிறப்பாக நடந்தேறியது. மேற்படி நிகழ்வானது கலாசாலையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாகவும் 10வது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழாவாகவும் 3வது அல் ஹாபிழ் பட்டமளிப்பு விழாவாகவும் 11வது தலைப்பாகை சூட்டும் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும். கலாபீட மௌலவி எஸ். முஹம்மட் அலி அவர்களின் தலைமையில் நடந்தேறிய மேற்படி நிகழ்வில் கலாபீடத்தின் ஆளுநர் சபை தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எம். மீராசாஹிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு பிரதம பேச்சாளராக கோவை இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ரி.எம். அமானுல்லாஹ் அவர்களும் முன்னிலை அதிதியாக தொழிலதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். ஜபீர் அவர்களும் பிரதம அதிதியாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கௌரவ கோத்தாகொட அவர்களும் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபையின் முஸ்லிம் விவகார இணைப்பாளரான ஹசன் மௌலான அவர்களும் கலந்துகொண்டனர். இன் நிகழ்வி...

கல்முனையில் 1700 ஏக்கர் நெற்செய்கை அழிவு; நஷ்டஈடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Image
கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கல்முனைப் பகுதியில் சுமார் 1700 ஏக்கர் விவசாயக் காணிகளில் நெற்செய்கை பண்ணப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையினால் அவை நீரில் மூழ்கி முற்றாக அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தாம் பெரும் நஷ்டமடைந்திருப்பதாகவும் இதற்காக தாம் பெற்ற கடன்களைக்கூட செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அது மாத்திரமல்லாமல் இந்த விவசாயத்தை நம்பி வாழ்கின்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியடைந்திருப்பதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினர். சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தமக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட மகஜர் ஒன்றை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கல்முனை கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சீமா நிறுவனத்தின் அனுசரணையில் பொருளியல் பாட இலவசக் கருத்தரங்கு

Image
இவ்வருடம் உயர்தரப்  பரீட்சை எழுதவுள்ள  வர்த்தக கலைப் பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் பாட இலவசக் கருத்தரங்கு  நேற்று  சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடை பெற்றது  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,  ஐ.ஜீ .கே மற்றும் சீமா நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இந்த இலவசக் கருத்தரங்கு சீமா நிறுவனத்தினால் நடாத்தப் பட்டது. இக்கருத்தரங்கு சீமா நிறுவனத்தின் 9வது இலவசக் கருத்தரங்காகும். சீமா நிறுவனத்தின் சந்தைப் படுத்தல் முகாமையாளர் எஸ்.விதுச தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார் . கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி  பிரதம விரிவுரையாளராகவும் ,கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வசந்த இமானுவல் , ஆசிரியர் ஸலாம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ...

மூதூரில் வாகன விபத்து வாலிபர் ஒருவர் மரணம்

Image
இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது வேகமாக சென்ற  பஸ் ஒன்று மோதியதில் ஒரு இளைஞன் மரணமடைதுள்ளதாக  மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர் . கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸே  இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது . விபத்தை அடுத்து  அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது  உடன் ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் . மரணித்த இளைஞனின் சடலம் மூதூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது . சாரதி  கைது செய்யப் பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பாக மூதூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . காயமடைந்த மற்ற இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் 

மருதமுனையில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி விற்பனை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி

Image
(யு.எம்.இஸ்ஹாக்)  மருதமுனையில் கடந்த சித்திரைப் புத்தான்டு தினத்தன்று ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை செய்யப்பட்டதென முகநூலில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என நேற்று  மருதமுனையில் நடை பெற்ற வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு கோணத்தில் மருதமுனை புத்தி ஜீவிகளால் மிக அழமாக ஆராயப் பட்டு நேற்று இறுதி முடிவெடுக்கப் பட்டது. இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஒன்று கூடல் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அலுவலகத்தில் இடம் பெற்றன. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லாறு , பெரிய நீலாவணை, துறை நீலாவணை , பாண்டிருப்பு , கல்முனை , காரைதீவூ கிராமங்களின் ஆலய தலைவர்களும் , மருதமுனை ஜம்இயத்துல் உலமா தலைவர் உட்பட மருதமுனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகள் கல்முனை மாநக...