கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா
(காமிஸ் கலீஸ்)
கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வானது கடந்த 25.05.2016 புதன் கிழமை மஸ்ஜிதுல் பலாஹ் முன்றலில் (கடற்கரைத் திடல்) வெகு சிறப்பாக நடந்தேறியது.
மேற்படி நிகழ்வானது கலாசாலையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவாகவும் 10வது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழாவாகவும் 3வது அல் ஹாபிழ் பட்டமளிப்பு விழாவாகவும் 11வது தலைப்பாகை சூட்டும் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
கலாபீட மௌலவி எஸ். முஹம்மட் அலி அவர்களின் தலைமையில் நடந்தேறிய மேற்படி நிகழ்வில் கலாபீடத்தின் ஆளுநர் சபை தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எம். மீராசாஹிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு பிரதம பேச்சாளராக கோவை இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ரி.எம். அமானுல்லாஹ் அவர்களும் முன்னிலை அதிதியாக தொழிலதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். ஜபீர் அவர்களும் பிரதம அதிதியாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கௌரவ கோத்தாகொட அவர்களும் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபையின் முஸ்லிம் விவகார இணைப்பாளரான ஹசன் மௌலான அவர்களும் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடங்கலாக ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment