O/L விண்ணப்பம் ஜூன் 10 வரை நீடிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் ஜூன் 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்தி குறித்த விண்ணப்ப முடிவுத் திகதியானது எதிர்வரும் மே 31 ஆம் திகதி முடிவடையும் நிலையில், வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களை கருத்திற்கொண்டு மேலும் 10 நாட்களுக்கு விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
க.பொ.த. சா/த பரீட்சைகள், எதிர்வரும் டிசம்பர் 06 தொடக்கம் டிசம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment