கல்முனை கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சீமா நிறுவனத்தின் அனுசரணையில் பொருளியல் பாட இலவசக் கருத்தரங்கு
இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள வர்த்தக கலைப் பிரிவு மாணவர்களுக்கான பொருளியல் பாட இலவசக் கருத்தரங்கு நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடை பெற்றது
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஐ.ஜீ .கே மற்றும் சீமா நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இந்த இலவசக் கருத்தரங்கு சீமா நிறுவனத்தினால் நடாத்தப் பட்டது. இக்கருத்தரங்கு சீமா நிறுவனத்தின் 9வது இலவசக் கருத்தரங்காகும்.
சீமா நிறுவனத்தின் சந்தைப் படுத்தல் முகாமையாளர் எஸ்.விதுச தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார் .
கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி பிரதம விரிவுரையாளராகவும் ,கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வசந்த இமானுவல் , ஆசிரியர் ஸலாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment