Posts

கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டியில் பாத்திமா றீஷ்மா 2ம் இடம்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு  பெண்களுக்கான தமிழ் மொழி மூலமான பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் தரம் - 4 ல் கல்வி பயிலும் மாணவி எம்.எச்.பாத்திமா றீஷ்மா, 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.  இவர் ஐ.எம்.ஹஸ்ஸாலி (திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்) எம்.எச்.நூறுல் ஹிமாயா(ஆசிரியை)தம்பதியின் சிரேஷ்ட புதல்வியாவார்;

சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி ஊடகவியலாளர்களுக்கு விஷேட செயலமர்வு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு சனிக்கிழமை (28-11-2015)காலை 9.30மணி தொடக்கம் பகல் 12.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் அறிவித்துள்ளார். இந்த செயலமர்வில் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

ஓ எல் தின விழாவுடன் கல்முனை உவெஸ்லி கல்லூரியில் முப்பெரும் விழா

Image
(யு.எம்.இஸ்ஹாக்)   கல்முனை உவெஸ்லி கல்லூரியில் க.பொ .த  (சா/த )  விழாவுடன்  இன்று  முப்பெரும் விழா நடை பெற்றது . கல்லூரியில் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களினால்  இவ்விழா ஏற்பாடு செய்யப் பட்டது. பகுதி தலைவர்  ஆசிரியர் கே.ருத்ரமூர்த்தியின்  வழிகாட்டலில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர்களினால் பாடசாலை கீதம் வரவேற்பு பாடல் இசைக்கப் பட்டு  வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மாணவர்களின் கலை காச்சார  நிகழ்வுகளுடன் மூன்று கட்டங்களாக ஆசிரியர் கௌரவிப்பும் இடம் பெற்றது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ .ஜெகநாதன் உட்பட சமீபத்தில் ஓய்வு பெறவுள்ள  கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலய அதிபர் திருமதி ஆர் .எம்.எஸ்.ஜீவராஜா , பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் டபிள் யு.ஈ .அருள்நேசன் ,பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய  அதிபர். திருமதி நற்குணசிங்கம்  ஆகியோரும்  கௌரவிக்கப் பட்டனர் . அத்தோடு  கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையில்  சாதனை படைத்த...

சாய்ந்தமருது யுனிவேர்சல் முன் பள்ளி பாலர் பாடசாலை மாணவ்ர்களின் இல்ல விளையாடடுப்போட்டி

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர்.  சாய்ந்தமருது யுனிவேர்சல் முன் பள்ளி  பாலர்  பாடசாலை மாணவ்ர்களின் இல்ல விளையாடடுப்போட்டி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்லூரியின் பனிப்பபாளர் ஏ.ஆர்.எம்.ஜபிர் தலைமயில் நடைபெற்ற் இந்நிகழ்வில் சாய்ந்தமருது   பிரதேச செயலாள ர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம் அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.ரகுமான் , சாய்ந்தமருது  அல் -கமரூன் வித்தியாலய அதிபர் திருமதி எல்.கே.ஏ.அன்வர் , கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ,சட்டத்தரணி எம்.சி.ஆதம் பாவா  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகலாலகவும் கலந்து    கொண்டனர் . இதில் சன்னி சைட் அணி  இல்லம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டது.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அபிவிருத்தி நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருவதற்கு தமிழ் அரசியல் வாதிகள் தயக்கம்

Image
கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை  கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது . இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அழைக்கப் பட்டிருந்தார் . இந்த நிகழ்வு  காலை 9.00 மணிக்கு  அதிபர்  திருமதி எஸ்.குமாரலிங்கம் தலைமையில் ஆரம்பமாவிருந்தது . பிரதம அதிதியின் வருகைக்காக முன்பள்ளி   மாணவர்கள் 10.30 மணிவரை மாலைகளுடன் எறிக்கும்  வெயிலில் காத்து நின்றனர் . ஆனால் பாராளுமன்ற உறுப்பினரோ வரவில்லை . இன்று காலைதான் அவர் கொழும்பில் இருந்து வந்ததாகவும்  நிகழ்வுக்கு வரமாட்டார் என்ற தகவலும்  கிடைத்தது . இந்த தகவல் அங்கு கூடி இருந்த  நூற்றுக்கணக்கான  பெற்றோர்களையும்  சின்னஞ் சிறார்களையும் கவலைக்குள்ளாக்கியது. சில பெற்றோர் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர் . அவர் வராவிட்டாலும் கௌரவ அதிதி வந்தால் அவரைக் கொண்டு நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்ற நப்பாசையில் பெற்றோர்களும் ,சி...

கல்முனை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்

Image
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சு ஊடாக  நிவாரண உதவிகள் கிடைக்காத  குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு  சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான  வாய்ப்பு  புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது . இதுவரை காலமும்  சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்கள்  பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று  பூர்த்தி செய்து  நவம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர்  பிரதேச செயலாளர் அல்லது  வாழ்வின் எழுச்சிப் பிரிவின்  தலைமை முகாமையாளரிடம்  ஒப்படைக்குமாறு கேட்க்கப் பட்டிருந்தது . அதன் பிரகாரம்  சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக  உதவி வழங்கும்  வேலை திட்டத்தை  உத்தியோகத்தர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் நேற்று    கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வாழ்வின் எழுச்சிப் பிரிவின்  தலைமை முகாமையாளர்  ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,சிறப்பு அதிதிகளாக  தலமைக் காரியால...

மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2015

Image
(அகமட் எஸ். முகைடீன்) மனித வாழ்க்கையின் அச்சானியாக காணப்படுகின்ற கல்வி மனிதர்களை புடம்போட்டு மனிதப்புனிதர்களாக மாற்றுகின்றது என்றால் மறுப்பதற்கில்லை. அவ்வாறான கல்வியினை மாணவச் சமூகத்திற்கு காத்திரமாக வழங்கிவரும் கல்வி நிறுவனங்களில் மெட்ரோபொலிடன் கல்லூரி சிறப்பிடம் பெறுகின்றது. சர்வதேச தரம் மிக்க உயர் கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் 15 ஆண்டுகளைத் தாண்டி படிக விழாக்கண்டிருக்கும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக சனிக்கிழமை (21) மாலை கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்தகம் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன்   மற்றும் அதிதிகளாக கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக வேந்தர் கலாநிதி செர்ஹட் அக்பினார், கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் சபை உறுப்பினர் வழக்கறிஞர் அரல் டோகூ, இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துன்கா ஒஸ்சுஹதா, இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி சைனுடீன், ஐக்கிய அறபு இராச்சிய தூதர...